உதிர்ந்த சொற்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
உணவைக் குறையுங்கள்
கொழுப்பு குறையும் என்ற மருத்துவரிடம்
ஒரு காலத்தில் உணவின்றி தவித்தவன் என்ற
ஒரு சொல்
மேடைப் பேச்சின் கைத்தட்டலிடையே நான்
பணிவு காட்டாமல் உதிர்த்த
ஒரு சொல்
நேர்முகத்தேர்வில் தேர்வாகும் வேளையில்
பதில் சொல்ல வேண்டிய நான் கேள்வி கேட்ட
ஒரு சொல்
விருந்துண்ட வேளையில்
விருந்தளிப்போனிடம்
உண்மையைச் சொன்ன
ஒரு சொல்
விரும்பியதெல்லாம் வாங்கிக்கொடுத்து
குழந்தைகள் முகம் வாடிப்போக வெளிப்பட்ட
ஒரு சொல்
உறவுகள் உயிரென மதித்திட
உணர்ச்சிவயப்பட்டு காயம் பட
உரைத்திட்ட
ஒரு சொல்
மூளையில் உதித்த சொற்களை
அப்படியே உதிர்த்து
சாயம் உதிர்ந்த சுவரென சொற்கள்
தவிர்க்கமுடிவதில்லை .
Posted by MULLAI RAJAN KAVITHAIGAL - முல்லை ராஜன் கவிதைகள்