சரதியல் இலங்கையின் Robin Hood

ஒவ்வொரு ஊரிலும் ஒரு சண்டியன் இருக்கத்தான் செய்வான் அவன் தன் வீரத்தைப் பாவித்து நல்லதும் செய்வான், சிலசமயங்களில் கெட்டதும் செய்வான். ஊர் சனங்கள் அந்தச் சண்டியன் தங்களுக்கு நல்லதைச் செய்தால், போற்றி புகழ்வார்கள். இங்கிலாந்தில் ரொபின் ஹூட் என்பவன் அரசுக்கு எதிராகச் செயற்பட்டு, ஏழை எளியவர்களுக்காக வாழ்ந்தான் என்று பிரபலயமான மரபு வழிக்கதையுண்டு ரொபின் ஹூட் ஒரு வில்வீரன்.

விக்டோரியா மகாராணி காலத்தில நடந்த கதையிது. அப்போது இலங்கையை பிரித்தானியர் ஆட்சி புரிந்தனர். இலங்கையில் கேகாலை மாவட்டத்தில் சிங்களவரும்> தமிழர்களும் வாழ்ந்தனர்.; கொழும்பிலிருந்து 40 மைல் தூரத்தில் வடக்கே உள்ள கேகாலை அருகே மாவனல்லல கிராமத்தில், உடவான்குன்றம் என்ற இடத்தில் 1832ம் ஆண்டு மார்ச் 25 திகதி பிறந்தான். அப்போது பிரித்தானியர் ஆட்;சி நடந்துகொண்டிருந்தது. அவனுடைய தந்தை ஒரு புகையிலை வியாபாரி. சரதியல் அவருக்கு மூத்தமகன்.. இலுகோடா என்ற இடத்தில் உள்ள பௌத்த கோவிலில் கல்வி பயில அவனைத் தகப்பன் அனுப்பிவைத்தார். தான் ஒரு புத்திசாலி எனச் சரதியல் காட்டி; கொண்டாலும் அவனோடு படித்த மற்றைய சிறுவர்களோடு சண்டை போட்டபடியே இருந்தான். கிராமத்து விதானையாரின் சொந்தக்கார சிறுவனை அடித்தற்காக அவனை சிறுவயதில் பொலீஸ் கைது செய்தது. சரதியலிடம் அடிவாங்கிய சிறுவன் பணக்கார குடும்பத்தவன்.

சிறுவனாக இருக்கும் போதே சரதியலுக்கு பணக்காரர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது. தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கினான் சரதியல். அந்தக் கூட்டத்தில் சில சிறுவர்களையும் சேர்த்துக்கொண்டான். ஊரில், மீசை வைத்த பாவா என்ற முஸ்லீம் முதலாளி ஒருவர் சாமான்களை உயர்ந்த விலைக்கு விற்று பணக்காரனானார். சரதியலுக்கு அது தெரியவேண்டிவந்தது. அவரைபிடித்து, அவர் மீசையை வெட்டி, அவர் பணத்தையும் கடைப்பொருட்களையும் களவாடி, ஊரில் உள்ள ஏழை மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தான்.

விரைவில்> கேகாலை பகுதியில் பல திருட்டுகளைப் புரிந்தான். சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டான். எப்படியும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொண்டான். அவனுக்குப் பிரித்தானியர் ஆட்சி மேல் வெறுப்பு. காலப்போக்கில் தனது கிராமத்தை விட்டுப் புறப்பட்டு கொழும்பில் இராணுவ வீரர்களின் குடியிருப்பில் வேலைக்காரப் பையனாக வேலைக்கு அமர்ந்தான். அங்கு இராணுவ வீரர்களின் உதவியோடு துப்பாக்கியையும் மற்றறைய ஆயுதங்களையும் பாவிக்க கற்றுக் கொண்டான். பல நாட்களுக்கு பின்னர் சில ஆயுதங்களையும் பெறுமதியான பொருட்களையும் களவாடிக் கொண்டு அவ்விடத்தை விட்டு சரதியல் வெளியேறினான்.

உட்டுவான்கந்த என்று இடத்துக்கு திரும்பிய சரதியல் மோசமான குற்றவாளிகளோடு கூட்டு சேர்ந்தான். கண்டி கொழும்பு பெரும் பாதையில் கொள்ளைகளில் ஈடுபட்டு, ஊரிpல் கொள்ளைக்காரன் என்று பெயர் வாங்கினான். அவனது பெயர் கேகாலையில் பலருக்கு தெரியவந்தது. நாட்டுக் கோட்டை செட்டியாரை கொள்ளையடித்து கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டான். ஆனால் சரதியல் மேல் வழக்கு தொடர போதிய ஆதாரம் இருக்காததால் விடுதலை செய்யப்பட்டான். மொலிகொட வளவைக் கொள்ளையடித்ததால் அவனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

கைதாவதிலிருந்து தப்புவதற்காக சிலாபத்தில் இருந்த தன் தந்தையிடம் அபயம் தேடிச் சென்றான் சரதியல். சண்டியனான தன் மகனுக்கு அபயம் கொடுக்க தந்தை மறுத்துpவிட்டார். வேறு வழியல்லாமல் திரும்பவும் உட்டுவான்கந்த என்ற இடத்துக்கு திரும்பிச்சென்று மேலும் சட்டத்துக்கு எதிராக குற்றங்களைச் செய்யத் தொடங்கினான்.

சரதியல்> நீர்கொழும்புக்கு அருகில் உள்ள பிலவத்த என்ற இடத்தில் இருப்பதாக அறிந்து அவனை கைது செய்ய பொலீஸ் முயற்சித்தது. சரதியலுக்கும் பொலீசுக்கும் இடையே நடந்த போராட்டத்தில் பொலீசுக்கு தன்னைக் காட்டிக் கொடுத்தவனைத் தான் கைதாக முன்பு கத்தியால் சரதியல் குத்தினான். கொலை செய்ய முயற்சித்த குற்றதுக்காக கொழும்பு ஹல்ஸ்டொப் நீதிமன்றத்தில்; விசாரிக்கப்பட்டான். வழக்கு நடக்கவிருக்கும் தினத்துக்கு முன்னரே சரதியல் விளக்க மறியலில் இருந்து தப்பி ஓடிவிட்டான். திரும்பவும் சரதியலை உட்டுவான்கந்தவில் வைத்து பொலீஸ் கைது செய்தது.

கொழும்புக்கு அவனை நீதிமன்றத்தில் ஆஜராக்குவதற்கு போகும் வழியில் ஒரு இரவு மஹர என்றயிடத்தில் அவனோடு தங்க நேர்ந்தது. சரதியலைப் பற்றி தாழ்வாக கருதியபடியால் அவனைப் போதுமான பாதுகாப்புடன் பொலீஸ் வைத்திருக்கவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தை பாவித்து சரதியல் பொலீசிடம் இருந்து கைவிலங்களோடு திரும்பவும் தப்பி ஓடினான்.

தப்பியோடிய சரதியல் மீண்டும் உட்டுவான்கந்தவுக்கு திரும்பி, பெரும்பாதையில் கொள்ளையடிப்பவர்களோடு கூட்டமைத்தான். அக்கூட்த்தில் ஹவுதியா, பாவா, சிறிமாலே, கிரிஹொன்டா, சுவந்தா, மாமலே மரைக்காயர் உள்ளடங்கினர். உட்டுவான்கந்த அவர்கள் இயங்கும் இடமாக இருந்தது. அந்த குன்றை சுற்றி இருந்த அடர்ந்த காடு, அவர்கள் பாதுகாப்பாக இருக்க உதவியாக இருந்தது. அந்தக் கொள்ளைக்கூட்டம் கொழும்பு - கண்டி பெரும்பாதை வழியில் போகும் வாகனங்களையும்> பிரயாணிகளையும், அவர்களது உடமைகளையும் கொள்ளையடித்தனர். அக் கொளளைக் கூட்டம் சட்டத்துக்குச் சவாலாக செயலாற்றியது.
கண்டிக்கு பொருட்களை உட்டுவான்கந்த என்ற இடத்தைக் கடந்து எடுத்துச் செல்ல வேண்டியிருந்ததால் கொந்துராத்துகாரர்கள் ஆயுதம் தாங்கிய பொலீசின் பாதுகாப்பை நாடினர். அப்படி பாதுகாப்பு இருந்தும் அவர்கள் சரதியலின் கூட்டத்தால் கொள்ளையடிக்கப்பட்டனர். சரதியலின் பயங்கரச் செயல்கள் விரைவில் நாடு முழுவதும் தெரியவந்தது. கண்டி-கொழுப்புக்கான பாதையில் அடிக்கடி சரதியல் கூட்டத்தின் செயல்களால் போக்குவரத்தில் தடை ஏற்பட்டது.

சரதியல் கூட்டத்தினால் இழைக்கப்பட்ட குற்றங்கள் எல்லைக்கு மீறியதால் கேகாலை> மாவனல்ல> ஹின்குல ஆகிய இடங்களில் உள்ள போலீகாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. கேகாலை உதவி அரச அதிபரும், பொலீஸ் சூப்பிரண்டன்டனும் கேகால மாவட்டத்தில் உள்ள கிராம விதானைமார்களுக்கு மக்களை அணுகி சரதியலை கைது செய்ய உதவும் படி கேட்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இந்தக் கட்டத்தில் சரதியலின் நடவடிக்கை, ரம்புக்கன, பொலகாகவலை, குருநாகல ஆகிய இடங்களுக்கும் பரவியது. கலகெதர இடத்தில் இருந்து குதிரை விற்க வந்த அரேபியரை கொன்று அவனிடம் இருந்துத 500 ரூபாய்களை கொள்ளையடித்தான் சரதியல். இருவியாபாரிகளை, பொலீசக்குத் தம்மைக் காட்டி கொடுத்தவர்கள் என்பதால் கொலை செய்தான். நாளடைவில் சரதியலின் கதை மக்களிடையே மரபு வழிக் கதையாயிற்று. அவனைப் பற்றி பேசவே மக்கள் பயந்தனர்.

ஒரு நாள் தாய்வீட்டில் அடைக்கலம் புகுந்த சரதியலை பொலீஸ் சுற்றிவலைத்தது. வீட்டுச் சுவரில் இருந்த துவாரமூடாகச் சுட்டு, இருவர் உயிர்ளைப் பலியெடுத்தான் சரதியல். முற்றுகையின் போது நடந்த குழப்பத்தில், சரதியல், மாத்தளைப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்குத் தப்பி ஓடினான்.

சரதியலின் கூட்டத்தில் இருந்த சிறிமாலே என்பவன் சரதியலின் ;கூட்டத்திலிருந்து விலகிப் போய் சரதியலை பொலீசக்கு காட்டிக் கொடுக்க தீர்மானித்தான். சரதியலை மாவனல்ல என்ற ஊரில் உள்ள வீடடில் சரதிலை பதுங்கி இருக்கும்படி சிறிமாலே ஆலோசனை சொன்னான் அந்த இரண்டுமாடி வீட்டில் சிறிமாலாவை நம்பி சரதியலும் மாமலே மரைக்காயரும் தங்கியிருக்கும் போது சிறிமாலே காட்டிக்கொடுத்து, பொலீஸ் வீட்டை முற்றுகையிட்டது. சார்ஜன்ட் அகமத் உடனடியாக சரதியலை நோக்கி சுட்டார். திருப்பித் சுடுவதற்கு முன்பே சரதியல் காயப்பட்டான். மாமலே மரைக்காயார் சுட்டதினால் பொலீஸ்காரர் சாபான அதிலேயே உயிர் நீத்தார்.

திரும்பவும் மரைக்காயர் சுட முன்னரே> மாமலே மரைக்காயரின் துப்பாக்கிச் சூட்டில் இருந்து சார்ஜன்ட் அகமத் சாகாமல் தப்பினார். பொலீஸ்காரர் தப்பி ஓடாமல் இருக்க மாமலே மரைக்காயர் வீட்டு வாசலில் ரிவால்வரோடு காவலுக்கு இருந்தான். அந்த சமயம் கேகாலை உதவி அரசாங்க அதிபராக இருந்த சோண்டேர்ஸ் என்பவர், சிலோன் ரைபில் படையைச் சேர்ந்த சிலரோடு சரதியலும் மாமலே மரைக்காயரும் இருந்த வீட்டுக்கு வந்தார்கள். இனியும் தப்பித்துப் போகமுடியாது என்று கண்ட அவர்கள், வேறு வழியின்றி சரணடைந்தனர். சரதியலும் மாமலே மரைக்காயரும் கண்டியில் உள்ள நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் செய்த பெரும் பல குற்றங்களுக்காக> அவர்கள் மேல் வழக்கு தொடரப்பட்டு தொம்சன் என்ற ஆங்கில நீதிபதி இருவரையும் குற்றவாளிகளாக கண்டு, இருவருக்கும் மரணதண்டனை விதித்தார். ஆங்கிலம் பேசும் ஜுரி முன்னே அவர்களது வழக்கு விசாரிக்கப்பட்டது. சிறைச்சாலையில் சரதியல் இருக்கும் போது தான் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தினான்.;

அட்வகேட் ரிச்சாட் மோர்கன் என்ற அட்வகேட், அரச வழக்கறிஞராக அவர்களுக்கு எதிராக ஆஜரானார். கவர்னருக்கு அவர் சமர்பித்த அறிக்கையில் இரு பொலீஸ்காரர்களின் வீரத்தனைப் பாராட்டி எழுதினார். பொலீஸ்காரன் சபான என்பவர் சரதியலைக் கைது செய்ய முயற்சித்து போது சுடுபட்டு 1864ஆம் ஆண்டு> மாhச் மாதம் 24ம் திகதி மரணமடைந்தார் இலங்கையில் தன் கடமையை செய்யும் போது உயிர் இழந்த முதல் பொலீஸ்காரரும் இவரே. அவர் மரணத்தின் பின்னர் ஒவவொரு வருடமும் மார்ச் 24ம் திகதி பொலீஸ இலாக்கா மறைந்த பொலீஸ் வீரர்களின் நினைவு தினமாக அனுசரிக்கிறது. 1864ஆம் ஆண்டு மே மதம் 7ஆம் திகதி சரதியலும் மாமலே மரைக்காயரும் கண்டி போகம்பர சிறச்சாலையில் தூக்கிலிடப்பட்டனர். ஆயிரக்கணக்காக மக்கள் சரதியலை கடைசி முறையாகப் பார்க்க திரண்டிருந்தனர். சரதியலை மூர்க்கமான> துணிவுமிக்க> உடலமைப்பு கொண்ட மனிதனாக எதிர்பார்த்த சனங்களுக்கு சரதியலின் இனிமையான முகமும்>> மெலிந்த உடலோடு இருந்தது அச்சரியத்தைக் கொடுத்தது. தூக்கில் தொங்க முனனர் எதையும் சொல்வதற்கு மாமலே மரைக்காயருக்கு துணிவு இருக்கவில்லை. தான் வாழ்க்கையில் வழிகெட்டு வாழ்ந்தது மக்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கட்டும் என்று இறக்க முன் சரதியல் வேண்டிக்கொண்டான்.

சரதியல் கேகாலை மாவட்டத்தில் ஒரு பெரும் பயங்கரவாதியாக இருந்தாலும் ஏழைகளிடம் இருந்து அவன் திருடவில்லை. பணக்காரர்களிடம் .இருந்த பணத்தை ஏழைக்கு கொடுப்பது தான் ரொபின் ஹ{ட்டின் கொள்கை போன்றது. சூதாட்டக்கரானான சரதியல் தான் எடுத்த சீதனத்தொகையின் இருமடங்கையும் அதோடு தனது பரிசாக சில பொருட்களையும் கொடுத்தான். பணக்காரர்களிடம் இருந்து செல்வத்தைப் பறித்து ஏழைமக்களுக்கு அவன் கொடுத்தபடியால் சிறீ லங்காவின் ரொபின் ஹூட் (Robin Hood ) எனப் பெயர் எடுத்தான்.
'

******

எழுதியவர் : (பொன் குலேந்திரன் - கனடா) (13-Oct-16, 6:54 am)
பார்வை : 177

மேலே