*** முதலிரவில் முள்ளாய்க் குத்தும் முதல் காதல் ***
இடம் மாறி
மனம் மாறி
விளம்பரப் பலகையான கௌரவத்துக்காய்
விரல் நீட்டி
கலங்கிய மனதோடு ,
கலக்க மில்லா கண்ளோடு....
இதமான, இதயமான, இதழான காதலனை
மார்புக்குள் மறைத்து
மாரப்புச் சேலையுடன்
மணந்து கொண்டேன்.
வேகமாய் ஓடும் கடிகாரங்கள்
இரவினை அழைக்க
வெந்து துடித்தது உயிர்.
குமுறி அழுத்தது மனம்.
சிரிப்பை மட்டும் முகத்தில் காட்டி
குனிந்த படி நான்...
பால் செம்பு ஏந்திய கரங்கள்
நடுக்கத்தோடு கால்கள்
நடமாடும் பிணமாகனேன் நான்...
தொட்டில் கட்ட இடம் பார்த்து
கட்டியவன் கட்டிலில்
குலுங்கும் உடலோடு
விடியாத நிலவானேன்
தலை தடவி அணையத்தபடி
இதலோடு இதலுரச
பதி ஜீவன் துடித்தழுதது...
இறுக மூடிய கண்கள்
வெறுப்பூட்டிய படி உதடு
அன்பாய் கொடுத்த முத்தம்
நெருந்தி முள்ளாய்க் குத்தியது.
மறக்க முடியாமல் தவிக்கின்றது
என் முதல் முத்தம்
மனம் திறந்து அழைக்கின்றது
மாலையிட்டவன் சத்தம்.
பெண்மையை உறுதி செய்ய
வெள்ளை விரித்த மெத்தையில்
மல்லிகைப் பூ மாலை
மெதுவாக மெதுவாக உதிர
வேலி முள்ளாய் குத்தியது
முதல் காதல்.
அடைக்கப் பட்ட அறையில்
அணைக்கப் பட்ட விளக்கு
பின்னப் பட்ட கால்கள்
சுரண்டும் விரல்கள்
அங்கம் மேவும் கரங்கள்
அதுவும் சொன்னது
முதல் காதல்
ஆடைகள் நீங்க
வெட்கம் துறந்தேன்
கன்னியின் தன்மை
தானும் இழந்தேன்.
முதல் காதலும்
முதல் முத்தமும்
தீயில் இட்டு புரட்டி எடுத்தது என்னை...
மனம் ஒருத்தனுக்கு
உடல் ஒருத்தனுக்கு
மறக்க முடியாத காதலோடு
உயிர் மட்டும்...
நொடிக்கு நொடி குத்துகின்றது
என் கண்களில்
வயதான வாலிபனை
வாழ்க்கைப் பட்டுப் போனதற்கு
கௌரவ மேய்ச்சலில் கட்டிய தாலி
எனக்கும் வேலியானது....
விடிந்த இரவில் நீண்ட தூக்கம்
வெளிப் படஉத்தியது இரத்த ஓட்டம்
முள்ளின் மேலே முகுத்தப் படுக்கை
முதுகைத் தடவும் முதல் காதல்
மறக்க முடியாமல் தினமும் சாதல்
புழுங்கும் மனதோடு தொடருது என் வாழ்க்கை....