தேடுவேன் உயிர் உள்ள வரை,
நீ
உண்மையோ ....
பொய்யோ....
பேசினாலும் .....
ரசிப்பேன் ......!!!
எத்தனை ...
முறை அடித்தாலும்...
தாய்மடித் தேடும் ...
பிள்ளையாய்...
உன்னை மட்டுமே ...
தேடுவேன்...
உயிர் உள்ள வரை,....!!!
நீ
பார்வையில் இருந்து
விலகி செல்லும் ....
போதெல்லாம் ....
கண்களுடன் .......
போராடுகின்றது,..
கண்ணீர் .....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்