நீ தான் என் வாழ்வு

பார்த்திருந்தேன் அன்பே எந்தன்
வாழ்வு நீதானே..
ஒரு கோடி பூக்கள்
உன்மேல் சிதறுதே..

உன் பார்வையால் உயிரே என்னை
துடிக்க செய்தாயே..
என் பொய் கோபம் உன் மேல்
பதறுதடா..

இசையோடு சேரும் தாளத்தை போல..
உன் விழியோடு இமையாக கலந்திருப்பேன்..
உடலோடு கலந்திருக்கும் உயிரை போல
நான் உன்னோடு இப்போதும்
எப்போதும் வாழ்ந்திருப்பேன்..

தன்னாலே என்னுளே அடைமழை
கண்ணீராய் வழிகிறதே..
வானை திறக்குது மழை
என் மெளனத்தை திறக்குது
உன் வார்த்தை..
உடைந்தது வெளிவந்தது உன் நாணம்..

பார்வையாலே காதல் செய்வோம்
ஒரு முறை உந்தன் பார்வை..
பின் இருவரின் பார்வையும் கலந்திடுமே
முதலது முடிவது உன் பார்வை
காதல் பரிமாறிடுவோம்..

பூத்திருந்தாய் உயிரே நான்
பார்த்திருப்பேன் உன்னை
என்னுள் கலந்திருப்பாய் உறவே
என் வாழ்வு நீதானே..

ஒரு கோடி பூக்கள் உன்மேல் சிதறுதே
நீ சொல்லிய ஒற்றை சொல்லில்
எந்தன் கால்கள் விண்ணில் பறக்குதடி
நீ சொல்லிய காதலில்
என் வாழ்வு மொத்தம் மாறியதடி..

என் காதலை வாழ வைத்தாய்
என் வாழ்வின் நாட்களை நீள வைத்தாய்
உன் வெட்கத்தை எனக்கு பரிசளித்தாய்..

என் இனியவனே உன்னை தவிக்கவிட்டேன்
இதயத்தை வாங்கி கொண்டு துடிக்கவிட்டேன்
என் உறவே.. உந்தன் காதல் மெய் என்று
உணர்ந்து கொண்டேன்..

என் பாவையே உன் பார்வையாய் எல்லாம்
நானே இருந்தேன்..
இனி நீ பார்க்கும் காட்சியாக
நானே இருப்பேன்..

காதலித்தேன் உன்னுள் கலந்து விட்டேன்
கண்ணாளனே எனக்குள் போர்க்களம்
சிறுதுளியே சிற்றரசனே சிங்கார மன்னவனே
நீ தான் என் வாழ்வே..

என் பொற்குவியலே புன்னகையே
நீ தான் என் வாழ்வே..
அடைமழையே ஆனந்த காற்றே
என் கனவே
நீ தான் என் வாழ்வே..

எழுதியவர் : கா. அம்பிகா (22-Oct-16, 6:18 pm)
Tanglish : nee thaan en vaazvu
பார்வை : 741

மேலே