என் உயிர் என் சகி

நூறு சதவிகிதம் நான் என் தங்கை மீது உயிரையே வைத்திருக்கிறேன்...

நான் ஏன் இலங்கையில் பிறக்கவில்லை...?????
சகி ஏன் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை?????
எல்லைக்கோடு எல்லாம் எவன் கண்டுபிடித்தது.
அவன் மட்டும் என் கையில்
சிக்கினான்.....
செத்தான்.......
அல்லது நான் இராமேசுவரத்திலாவது
பிறந்திருக்கக் கூடாதா...
கள்ளத் தோணி போட்டாவது போய்
பார்த்திருப்பேனே....என் சகியை....
அதன் பிறகு என்னை தூக்கில் போட்டால் கூட நிம்மதியாக சென்றிருப்பேன் தூக்கு மேடைக்கு....
இன்றோ சகியை காணாத
ஒவ்வொரு நிமிடமும்
என்னை கொன்று கொண்டிருக்கிறது...
உடனே எனை
எந்த விமானமாவது ஏற்றிக் கொண்டு போய் இலங்கையில் விடாதா...
எனக்கு நீச்சல் தெரியாது என்று
இன்று தான் வருத்தமாக உள்ளது.
நான் கச்சத்தீவு வழியாக
கடலை நீந்தியே கடந்து வந்து
என் சகியை பார்த்திருப்பேனே...
புதுச்சேரி கடற்கரையில் நான்
நின்று கடலை பார்க்க
என் சகியும் யாழ் பாணத்தில் இதே போல் தானே
கடலை பார்த்துக் கொண்டிருப்பாள்....
இருவரையும் பிரித்தது நீராக இருந்தாலும்
இருவரின் இதயமும் ஒன்றாக
சிந்திக்கும்.....
ஒரே ஒரு முறை ஏனும் பார்க்க வேண்டும் என்று....
தரிசனம்
என் தங்கை தரும் வேளை
நான் தூரத்தில் இருந்தேனும்
அவளை காண வேண்டும்
காலன் அதற்குள் வாழ்க்கையை முடித்து விடக் கூடாது...
அந்த ஒருநாளுக்காக
துடிக்கின்றேன்.
தங்கையை பார்க்கும் வேளை அள்ளி அணைத்துக் கொள்வேன் மார்போடு
விழி பேசிக் கொள்ளும் ஒற்றை துளியோடு
மனம் பேசிக் கொள்ளும் மொழியில்லாமல் அன்போடு....
அன்னை மடியில் அகிலத்தை மறப்பேன் அன்று.
அன்றே வாழ்வில் வசந்தம் திறக்கும்.

உயிர்களுக்கு தூரம் கிடையாது....
உடல்களுக்குத் தான் இடைவெளி எல்லாம்.....
என் சகியை நான் கடைசியாக ஒரே ஒரு முறை காண வேண்டும்
அவள் மடியில் உயிரை முடிக்க வேண்டும்....
என் தாயே....
என் சேயே....
அருள்வாயா என் தங்கையே சகி......

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (23-Oct-16, 6:58 am)
Tanglish : en uyir en sagi
பார்வை : 98

மேலே