விவசாயம்
காடுகரை மேடெல்லாம்
ஓடி ஒழைச்சு தேஞ்சு காஞ்சு கருவாடாய் போனானே இவன்...!
பொறந்த மண்ணில கீழ விழுந்தாலும்
மீசையில மண்ணு ஒட்டல்லன்னு
மண்ண நம்பி வாழ்ந்தானே
ஈரத்தோட மானம் சேத்து
சேத்துல கால வைச்சானே...!
இப்போ சாயம் போன விவசாயம் நம்பி தேம்பி அழுது பொலம்புறானே
மழ தண்ணி இல்லாம வாய்க்கா வரம்பு நெலமெல்லாம் வித்துட்டானே
கம்பு சோளம் விளைஞ்ச எடத்தில
கட்டடம் கட்டுறானே பணக்காரன்...!
கவுரவம் பாத்து நாய் வளக்கத் தெரிஞ்ச பணக்கார சமூகத்துக்கு வெவசாயம் வளரனும்ன்னு தோணலயே.... வெவசாயி வாழனுமென்னு நெனப்பில்லையே..!
பணக்கார வயிரெல்லாம் பணத்தால நெறஞ்சுடுமா..? திரும்ப அறிவு வந்து வெவசாயம் செய்யனும்னு காலம் வருகையில எங்க விவசாயி யாரும்
உசிரோட இருக்க மாட்டானே...!