காதல் வலி

உன் கண்களில்
காதல் கேட்டால்
என் கண்களில்
கண்ணீர் தருவாய்

வழி கேட்டால்
வலி தரும் வகை(த)யறிவாய்
"கொட்டும் மழை வேண்டாம்
சன்னல் வழி சிதறும்
சாரல் தா "
என்று நீ கேட்கும் நாளில்...

மேகமற்றிருக்கும் என் வானம்

எழுதியவர் : செந்தூரணி (25-Oct-16, 11:48 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 401

மேலே