நினைத்து பார்த்தேன்
மறந்து பார்த்தேன்
மறக்க முடியவில்லை
உன் பெயரை ....
கண் மூடி பார்த்தேன்
மறையவில்லை
உன் பிம்பம்....
தூங்கி பார்த்தேன்
தூங்கவில்லை
உன் நினைவுகள் .....
தேடி பார்த்தேன்
கிடைக்கவில்லை
என் நிழலை....
இறந்து பார்த்தேன்
முடியவில்லை
என் நாட்கள் .....
கண்மணியே
உன்னை நினைத்து பார்த்தேன்
வந்தது கண்ணீர் துளிகள் ....