ஹார்மோன்களை எழுப்பும் உன் மலர் முகம் 555

அழகே...

உன்னை சந்திக்க நான்
புறப்பட்டேன்...

ஏனோ தடுத்தது மண்ணை
தொடும் மழைத்துளிகள்...

நொடிகளை யுகமாக்கி கா
த்திருந்தேன்...

சலசலவென ஓடும் ஓடை நீரின்
சப்தங்களை போல உன் குரல்...

உன் குரல் எனக்குள்ளே
ஒலித்துக்கொண்டு...

என் ஹார்மோன்களை தட்டி
எழுப்பும் உன் மலர் முகம்...

எனக்குள்ளே கேட்டுக்கொண்டு
இருந்த உன் குரல்...

மீண்டும் மீண்டும் கேட்டது
என் வீட்டு முற்றத்தில்...

உன் குரல் கொஞ்சம் குழைவாய்
லயமாய் கேட்குமடி...

இப்போதும் கேட்டது
அதே உன் குரல்...

தலை நிமிர்ந்தேன்
என் எதிரே நீயடி...

நீ மட்டும் எப்படி வந்தாய் மண்ணை
தொடும் மழைநீரை சுமந்துகொண்டு...

என் வாசல் வந்த நீ என்னை
முழுவதும் ஆட்சி செய்ய வேண்டும்...

எப்போது வருவாய் என்
தாயின் மருமகளாக நீ.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (1-Nov-16, 8:08 pm)
பார்வை : 205

மேலே