சிநேகிதி
உன் அழகை
வார்த்தைகளால்
வர்ணனை செய்ய
முயற்சித்தேன்!
பொய்யென்கிறாய்!!!
என் அன்பை
வேடிக்கையாய்
வெளிப்படுத்தினேன்!
பொய்யென்கிறாய்!!!
பொய் உவமைகளில்
கலந்திருக்கும்!
அவ்வுவமைகளும்
உனைக்கண்டு
உறைந்து நிற்கும்!!
நாவின் நரம்புகளில்
காதல் வாத்தியமிட்டு
நட்பெனும் நாட்டியமாடும்
என் அன்பு தோழியே!
நீயே
பொய்க்காரி!!!
நீ
சிரிக்கும் பொழுதும்
சிணுங்கும் பொழுதும்
சிலிர்த்துப்போகும்
தேகம், - எனை
முறைக்கும் பொழுதும்
முத்தமிடும் பொழுதும்
வியர்த்துப்போக
ஆசை...
குழந்தை நடையும்
குமரி உடையும்
உனக்கென உண்டு
அணியாய்!!!
கனவுகளோடு
காதலும் சுமக்கும் - என்
குருதியில் வாழ்ந்திடு
அனுவாய்!!!