கறுப்புப் பண பேர்வழியின் புலம்பல்

கத்தை கத்தையாய் பதுக்கி வச்ச
கறுப்புப் பணமெல்லாம் கருவாடாய் நாறிப் போச்சே
ஈயத்தைப் பாத்து இளிச்ச பித்தாளை போல
என்ன பாத்து இளிச்சுக் கிடக்குதே
கலர்ல பணம் இருக்கலாம் ஆனா
கறுப்புல பணம் இருக்கக் கூடாதா ?
நிற வேற்றுமை பாராட்டலாமா அரசு ?
கறுப்புத்தானே எனக்கு பிடிச்ச கலரு
கறுப்புல நான் பணம் வச்சிருந்தா அதிலென்ன தவறு ?
புத்தப் புதுசா நேத்து வாங்கி வச்ச நோட்டு
இன்னைக்கி மவுசு எழந்து போச்சே !
பணம் பணம்னு சேத்ததெல்லாம் வெறும் காகிதமாச்சே
பலசரக்கு கடை பொட்டலம் போட லாயக்கச்சே !
ஐயோ இது என்ன சோதனை ?
தலையை சுத்துதே மாரடைக்கிற மாதிரி இருக்குதே
ஆசுபத்திரில சேத்தாகூட ஐநூறையும் ஆயிரத்தையும்
கையால தொடமாட்டானே மருத்துவன் !
என்ன செய்வேன் ஏது செய்வேன் இறைவா
கண்ணா நீ கறுப்பு நிறம்தானடா , சொல்லடா !
----கவின் சாரலன்