நதிக்கோர் ஜதி
நதி பாடி வரும் ஜதியில்
மதி மயங்குகிறோம் அதன் சுதியில்
விதி செய்கின்ற சதியால்
நதி வறல்வது முறையோ..?
அழகை சுமந்து வரும் நதி அரசி
பழகிப் பார்ப்போருக்கு கவி அரசி
பொதிகையில் புறப்படும் நகை அரசி
மதிஈனருக்கு உன்மேல் பகை அரசி..!
நிதி பற்றாக் குறைகளினால் – நாட்டில்
நதி நீர் தேக்கங்கள் மிகக் குறைவு..!
வடிகால் வசதிகள் சரியாக இல்லாததால்
வீணாக கடலில் கலப்பது தலை குனிவு..!
வறட்சியின் பிடியில் சிக்கிய விவசாயிகளை
விரட்டி விரட்டிப் பிடிக்குதே தேசிய வங்கி-கிளை
வட்டிக்கூட சரியாக கட்ட முடியாமல் – விரட்சியில்
தற்கொலை புரிகிறான் வேறுவழி இல்லாமல்..!
மணல் மஃபியா கும்பளோடு – பல தலைகள்
தினம் கொள்ளுதே கொள்கை உடன்பாடு..!
பணம் பாதாளம்வரை பாய்வதால் – அவர்களின்
வளம் கொழிக்குதே அரசின் துணையோடு..!
பெண்களின் பெயர்களைத் தாங்கிப் பாயும்
புண்ணிய நதிகளே..! நன்மைகள் கோடி செய்து
இந்திய மண்ணில் விந்தை புரிவீர்களே..! இறுதியில்
இந்துமா சமுத்திரங்களில் வீணாய் கலப்பீர்களே..!