ஞாபகம் இருக்கிறதா தோழி....?
![](https://eluthu.com/images/loading.gif)
ஞாபகமிருக்கிறதா தோழி..?
கல்லூரி நாட்களில் கல்லூரியில்
நாம் செய்த குறும்புகளை.....!
காலையிலே வகுப்பிற்கு செல்லாது நூலகத்தில் ஒளிந்து கதைபுத்தகங்கள் வாசித்து மகிழ்ந்த நாட்கள்....!
வகுப்பிலே ஆசிரியர் வந்தது தெரியாது கடைசி வரிசையில் அமர்ந்து நித்திரை தூங்கி அடி வாங்கி அழுத தருணங்கள்.....!
கல்லூரியிலே காதலிக்கும் நண்பிகளை நக்கலடித்து அவர்களிடம் திட்டு வாங்கி வாயை சுழித்துவிட்டு ஓடிச்சென்ற நிமிடங்கள்....!
வரலாற்றுப் பாடத்தில் முதல் புள்ளிகளைப் பெற்று மற்றவர்களிடம் பெருமையடித்துத் திரிந்த தருணங்கள்......!
தோழியின் எழுது கோல் உடைந்ததும் எனது எழுது கோலை கொடுத்து விட்டு பாடத்தை எழுதாமல் கடலை சாப்பிட்ட தருணங்கள்...!
அனைவரின் உணவுகளையும் பகிர்ந்து உண்டு மாலையில் விடுதி சென்றோம் அன்று மகிழ்ச்சியுடன்...!
என் மனதிலே நீண்ட ஆனந்தத்தை தந்த அழகிய நட்புக்களின் நினைவுகள் கண்ணீரில் இன்று....!
என் கண் இமைகளை கரைத்து கன்னத்தின் வழியாக சென்று என் மார்பை நனைக்கிறதே...! தவிக்கிறேன் கண்ணீரை அடக்க முடியாதவளாய்..!