ஐந்திற்கும் பத்திற்கும்

ஐந்திற்கும் பத்திற்கும் வேலை செய்தேன்
பத்தென்றும் ஐந்தென்றும் அறியாது
சேமிப்பு தான் வாழ்வென்று
பாதியை வைத்து வந்தேன்
எந்தன் சட்டைபையினிலே

மீதியை வாழ்வதற்குத்தான்
செலவு செய்தேன்
அதிலும் பாதியை வரியென்று
பொருள்களின் அடக்க விலையோடு
சேர்த்தேதான் தந்தேனே
ஐந்திற்கும் பத்திற்கும் வேலை செய்தேன்
பத்தென்றும் ஐந்தென்றும் அறியாது

இன்றோ சட்டைபையினில் உள்ள
ஐந்தும் பத்தும் செல்லாது
கணக்கினில் இல்லை என்றால்
அபராதம் கட்டிவிடு
நீ வைத்துள்ள ஐந்திற்கும் பத்திற்கும்
என்றேதான் அரசாங்கம் சொல்லிடுதே

குருவியாய் நான் சேர்த்த செல்வம் எல்லாம்
கருப்பு பணம் என்றே தான்
முத்திரையும் ஆனதே
எந்தன் நித்திரையும் போனதே

பெரும் செல்வம் சேர்க்க
நானொன்றும் பாணியோ தானியோ
இல்லை ஐயா
எங்கு போய் சொல்வேனோ
எந்தன் பெருந்துயரை.....

வரிசையினில் நிற்பதுதான்
எனக்கொன்றும் புதிதல்ல
ஆனால் என்னுடன் சேர்ந்து
நிற்க எந்தன் முதலாளிகள்
இல்லை ஐயா!!!!

----தேன் மொழி

எழுதியவர் : தேன் மொழி (16-Nov-16, 11:11 am)
சேர்த்தது : சதீசுகுமரன்
பார்வை : 80

மேலே