காதலிக்காமல் இருந்துப்பார்
காதலிக்காமல் இருந்துப்பார்
பாக்கெட்டில் சில்லறை நிறையும்
இடுகாட்டில் கல்லறை குறையும்
கையெழுத்து அழகாவிடிலும்
தலையெழுத்து அழகாகும்
செல்வியின் பின்னால் நடக்காமல்
கல்வியின் பின்னால் நடப்பாய்
பெண்களின் அழகைப் படிக்காமல்
எண்களின் அழகைப் படிப்பாய்
கோவிலில் கோபியர்களைக் காணாது
கோபுரங்களைக் காண்பாய்
காதலிக்காமல் இருந்துப்பார்
துக்கத்தின் வரவு குறையும்
தூக்கத்தின் இரவு நிறையும்
பூவை விரும்பாது
உழைப்பூவை விரும்புவாய்
பார்க்கும் பெண்களையெல்லாம்
தாரமாகக் காணாமல்
தாயாகக் காண்பாய்
உனக்கும் கவிதை வரும்
பெண்ணைப் பற்றியல்ல
விண்ணப் பற்றி
தாய் மண்ணைப்பற்றி
காதலிக்காமல் இருந்துப்பார்
இரவில் கனவு குறையும்
உணவு நிறையும்
வழியில் மதிப் பெண்களின்
மீது பார்வை குறையும்
வகுப்பில் மதிப்பெண்களின்
கோர்வை நிறையும்
சேலையைத் தேடாமல்
வேலையைத் தேடுவாய்
காதல்
வேலையற்றோரின் முதல் வேலை
என்ற வார்த்தை அசரீரியாய் ஒலிக்கும்
காதில்
புதர் காதலர்களின்
போதிமரம் என்போருக்கு
மத்தியில்
புத்தர் காளையர்களின்
போதிமரம் என்பாய்
அழகியைக்காண
மார்கழிப்பனியில் சேராமல்
அழகான மார்க்கப் பணியில் சேருவாய்
பெற்றோர் பார்க்கும் பெண்ணோடு கரம் சேருவாய்
சேர்த்துவைப்பாய் வருவாய்
எதிர்காலத்தில்
பெரிய ஆளாய் வாருவாய்
வாழ்வில் முன்னேற்றம் பெறுவாய்
காதலிக்காமல் இருந்துப்பார்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
