உந்தன் உணர்வை ஊட்டும் என் தமிழ்

உந்தன் அழகு மட்டுமில்லையடி
எந்தன் தமிழ் தான் முதற் காரணம்
எனக்கு உன்னைப் பிடித்ததற்கு.

உந்தன் விழிகள் தரும்
பாடல்களால் நான் எந்தன்
தமிழினை அலங்கரிக்கிறேன்.

எந்தன் தமிழில் உள்ள
இனிமையால் உந்தன் உணர்வுகளை
என்னுள் வளமாக்கி வைக்கிறேன்.

எனது பாடல்கள், தமிழ்,
உனது நினைவுகள் என்று
இன்பங்களை நான் என் நெஞ்சத்தல்
கலந்துதான் வைக்கிறேன்.


உன்னை என் எழுத்துக்களில்
அழுத்தமாய் உணர்ந்த போதெல்லாம்
“இவளைத் தவிர வேறு எவளைப்பற்றியும்
இப்பொழுது எழுதாதே!”
என்று என் தமிழ் எனக்கு நினைவூட்டும்.

என் தமிழ்தானடி உன்னை
உயர்ந்த இடத்துள் என்னில் வைத்திருக்கிறது.
என் தமிழ் காட்டிய அருட் கொடை நீ.
அப்படி இருக்கும் உன்னை நான் எப்படி மறக்க?

நீ உணருகிறாயோ இல்லையோ
நான் உணர்ந்துகொண்டுதான் இருப்பேன்
தமிழுடன் சேர்த்து உன்னையும்.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (21-Nov-16, 7:43 pm)
பார்வை : 88

மேலே