தினமணி கவிதைமணி தந்த தலைப்பு புதையல் கவிஞர் இரா இரவி

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !
புதையல் ! கவிஞர் இரா .இரவி !

புதையல் தேடி அலையும் உலகம்
புண்ணியம் தேடி அலைவது இல்லை !

புதையலுக்கான தேடல் எங்கும் உள்ளது
படிக்காதவர் படித்தவர் எல்லோருக்கும் உள்ளது !

புதையலுக்காக நரபலி கூட தருகின்றனர்
பின் கைதாகி கம்பி எண்ணுகின்றனர் !
.
உழைக்காமல் வரும் செல்வம் நிலைக்காது
உழைத்த செல்வமும் இல்லாமல் போகும் காலம் !

விரைவில் பணக்காரன் ஆக வேண்டும் என்ற
விருப்பத்தில் புதையல் தேடி அலைகின்றனர் !

கிடைக்கும் புதையல் தனிநபர் சொந்தமென்று
கிடைக்கும் புதையல் அரசாங்கத்தின் சொத்தாகும் !

கிடைத்த புதையலை அப்படியே அமுக்கி
காலம் கழிந்து கைதாவதும் உண்டு !

இறந்த பிச்சைக்காரன் காலடியில் பார்த்தபோது
எண்ணிலடங்கா பணப்புதையல் இருந்து என்ன பயன் !

உள்ளத்தில் உள்ளது உண்மைப் புதையல்
உணர்ந்தால் இன்பம் விளையும் வயல் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (22-Nov-16, 7:12 pm)
பார்வை : 56

மேலே