நிலவின் தனிமை

உனக்கென யாரும் இல்லை -என்று
வருந்தாதே காற்றில் ஆடும் தேதி
தாள்கள் கூட அழைக்கிறது என்னுடன்
நடந்து வா என்று ....
உனக்கென யாரும் இல்லை -என்று
வருந்தாதே
விண்மீன்கள்கூட கண் சிமிட்டுகிறது
என்னோடு உறவாடு என்று.....
வீசும் காற்றுகூட சொல்லுகிறது -உன்
கண்ணீர் துளிகளை துடைப்பதற்க்கு
நான் இருக்கிறேன் என்று......
உனக்கென யாரும் இல்லை -என்று
வருந்தாதே
உன் இதயம்கூட துடிக்கிறது என் ஆயுள் உள்ளவரை
நீ இருப்பாய் என்று....
மரணம் கூட ஜனனம் எடுக்க தயங்குகிறது
உன்னை விழ்த்துவதா என்று ........
உனக்கென யாரும் இல்லை -என்று
வருந்தாதே

எழுதியவர் : பிரபாவதி.s (25-Nov-16, 3:54 pm)
Tanglish : nilavin thanimai
பார்வை : 333

மேலே