அத்தை மகள்

சொந்தங்களை பற்றி தெரியாத வயதில்
என் முதல் சொந்தமாய் வந்தவள்
என்றும் என் உறவாய் இருப்பவள்...............!

எனக்கொரு வலி என்றால்
எனக்கு முன்பே துடிப்பவள்......................!

என் கண்களில் நீர் வந்தால்
முதலில் வந்து துடைப்பவள்...................!

தவறு எதோ செய்தால்
என்னை அடிப்பவள்.......................!

சோகமாய் இருக்கும் நேரத்தில்-தன்
தோளிலே என்னை சுமப்பவள்..........................!

எனக்காகவே பிறந்தவள்
அன்பிலே சிறந்தவள்................!

அழகாய் சிரிப்பவள்
ஆறுதல் உறைப்பவள்...........................! வீட்டில் எல்லோருக்கும்
ரொம்ப பிடித்தவள்.....................!
என்னை முழுதும் படித்தவள்..........................!

அவளை பற்றி எழுதாத கவிதைகளும் இல்லை.................!
அவளை பற்றி எழுதாதது கவிதையும் இல்லை..........................!

(அழகிய நினைவுகளுடன் மீண்டும் தொடரும்................................!)

எழுதியவர் : சு சங்கத்தமிழன் (25-Nov-16, 5:39 pm)
சேர்த்தது : சு சங்கத்தமிழன்
Tanglish : atthai magal
பார்வை : 3083

மேலே