இறைவனிடம் ஈன்றவளுக்காக

வரமொன்று
கேட்கிறேன்
கடவுளே..
உயிர்
எடுக்கும்
உரிமை
உனக்கு
உள்ளது
என்றால்...
உத்தமர்களின்
உயிரை
எடுப்பதும்
நீயென்றால்...
சிவனும்
எமனும்
என்
தாய்க்கு
கட்டுப்பட்டு
கிடக்க
வேண்டுமென...
என் அம்மாவிற்கு
இறப்பென்பதே
இருக்கக்கூடாது
என்பதற்காக...
உயிர்
எடுத்தே
ஆக
வேண்டுமென்றால்
எதற்கு
இருக்கிறது
எனது
உயிர்...
உனக்கு
எதற்கு
எனது
அன்னையின்
உயிர்?
உன்னை
சொல்லி
என்ன
பயன்
உனக்கு
ஒரு
தாய்
இருந்திருந்தால்
உனக்கு
தெரிந்திருக்கும்
அன்னை
இறந்து
விட்டால்
உணர்வு
இல்லாத
உணர்வோடுதான்
உண்மையில்
மகன்கள்
அலைவார்கள்
என்று...
உண்மை
மகனாய்
இருந்திருந்தால்...
நீயும்
உண்மை
தமிழனாய்
அதை
உணர்ந்திருந்தால்....
நீ
உணராததை
நான்
உணர்ந்துவிட்டேன்
எனவே
என்னை
ஈனறவளுக்கு
இறப்பென்பதே
இருக்கக்கூடாது
என
உன்னை
வேண்டுகிறேன்...