நகைச்சவை -மனைவியை ஏய்க்கப் பார்க்கும் கணவன்
மனைவி (ஆபீஸ் நிமித்தமாய் மதுரை சென்று
வீடு திரும்பிய கணவனின் பையிலிருந்த
நேற்றைய டிபன் போஸ் ஐ வெளியே எடுக்க)
ஏங்க உங்களைத்தான் இங்கே கொஞ்சம்
என்ன பாருங்க .........உங்க டிபன் பைய
திறந்தேன் அதிலே குப்புனு மதுர மல்லி
வாசனை வருதுங்களே ............என்ன விஷயம்?
ம்ம்ம்ம்ம்ம்ம் ...........மறைக்காம சொல்லுங்க ..
(சின்ன வீடு உண்டானு சந்தேகத்துல )
கணவன் (தன சின்ன வீட்டுக்கு நேத்து வாங்கி கொடுத்த
மல்லி ஞாபகம் வர,அதா மறைச்சு ,மனைவிக்கு
ஓர் சமாதான பதில் தருதல்)
ஆதி அசடே என்னவளே ! இதனை நாள் என்னை
நீ புரிந்து கொண்ட லட்சணம் இது தான்னா ...?
உன்ன விட்டா எனக்கு வேறு கதி ஏது, பைத்தியமே
அந்த மல்லிகைப்பூ வாசனை உன் கையில் எப்போதும்
வீசும் வாசனையே தெரிந்து கொள்
வேண்டாம் உனக்கு இனி சந்தேகம் ..................
மனைவி : (பாவம் வெகுளி நம்பிவிடுகிறாள்)
தெரியாமல் ஏதோ சொல்லிடீங்க ............மன்னிச்சுக்கோங்க
இனி இதை பத்தி பேச மாட்டேங்க
கணவன் :(மனதுக்குள் மனைவியை ஏமாற்றிய திருப்தி ஒரு பக்கம்
பொய் சொல்லிய குற்ற உணர்வு ஒரு பக்கம் தாக்க)
சேரி சேரி, பொய் சூட ஒரு கப் காபி கொண்டுட்டுவா .
குளிச்சுட்டு ஆபீஸ் கிளம்பனும் .
(இப்படியும் மனைவியை ஏமாற்றுபவர் உண்டு, ஏமாறும் வெகுளி மனைவிகளும் உண்டு!)