துரோகி,

நட்பை மறந்து மறைத்திட்ட
சேர்க்கை மறந்தாய் தீயவனே,,,
யார்க்கும் எதற்கும் பயனில்லா
உறவைக் கொண்டாய் கொடியவனே,,,

பறவை உண்போல் கிடையாது
பாசம் கொண்டே பறக்குதுவே,
வீசும் காற்றில் கூட
விஷமம் கலந்தாய் சூழ்ச்சமனே,

எச்சம் என்றே நினைத்தாயோ
பிச்சை புகுவாய் புறம்தள்ளி,
எட்டும் வரையில் நிற்காதே
எட்டுத் திக்கிளும் வாழாதே,

இறவல் கேட்டு வந்தவனே
இடமே கொடுத்தேன் நல்லவனாய்
விட்டுச் சென்றால் போதாதென்று
வெட்டிச் சென்றாய் வெறியவனே...,

என்னை விடவாம் பொருளென்று
பேதம் பார்த்தாய் தரியவனே,
நானும் ஓர் உயிர்தானே
நினைப்பே இல்லாக் கொடியவனே,

வேதம் ஒருநாள் புதிதாகும்
மீதம் இல்லா மடிவாயே,,,
மரணப் படுக்கைக் கொண்டிடுவாய்
மறவே வேண்டாம் ஒருநாளும்....

- கலைவாணன்

எழுதியவர் : கலைவாணன் (15-Dec-16, 3:18 pm)
பார்வை : 395

மேலே