மழை காலத்தின் அழகுகள்
வானத்தை சிறை பிடித்த மேகங்கள் அழகு...
பூமியில் குதித்து விளையாட ஆசையோடு வரும் மழையின் ஆரம்பமான தூரல் அழகு...
சில்லென்று வந்து தேகத்தை சிலிர்க்க வைக்கும் சாரல் அழகு....
மழை நின்றவுடன் மாலை நேரங்களில் தவளை போடும் இசை அழகு....
மழையில் நெனைந்த மரங்களை அசைத்து அதில் நினையும் தருனம் ஐயோ அவ்வளவு அழகு....
மழையில் நெனைந்து விளையாடுவது அழகு....
மழையில் நினைந்து விளையாடி விட்டு வீட்டீற்கு போய் அம்மாவிடம் வாங்கும் அன்பான திட்டு அழகு....
மழை துளிகள் அமர்ந்து இருப்பதால் என்னவோ செடிகளும் அதில் பூத்திற்கும் பூக்களெல்லாம் இனையற்ற அழகு....
மழையில் குளித்து விட்டு துவட்டி கொள்ளாத இலைகள் அழகு.....
அன்புடன் இந்த அழகை ரசித்தவன் உங்கள் நண்பன் ....கிருபா......
நீங்களும் இந்த அழகை ரசித்தால் பகிரவும் நண்பர்களே