பறக்குது மனசு

மெல்ல நான் பறந்தேன்
லேசாக என்னை உணர்ந்தேன்

மனதின் சுமை யாவும்
மெழுகாக உருகக் கண்டேன்

ஏன் இந்த மாற்றம் என்னுள்
எனை நானே கேட்கும் தருணம்

திடீர் என்று எந்தன் நெஞ்சம்
ஏன் இன்று இப்படி தஞ்சம்

விடை புரியா கேள்விகள் இன்று
என்னுள் புதைந்து கிடக்கிறதென்று

எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன்
மனசுக்குள் எனையே பூட்டிக் கொண்டேன்...

பாகா
follow my blog to see my all poems
my blog - பாகாவின் பிதற்றல் கவிதைகள்
thank you for your support

எழுதியவர் : பாகா (20-Dec-16, 2:22 pm)
Tanglish : parakkuthu manasu
பார்வை : 115

மேலே