மௌனமே வாழ்வை அளித்துவிடு

பெண்மையின் அழகியே
மௌனத்தின் பொக்கிஷமே
கருநிற விழிகளின் அழகியே-உன்
பார்வையின் அர்த்தம் தான் என்னோ
பார்த்த நாள் முதல்-உன்
பார்வையை எனக்காய் பரிசளித்தாய்
பத்திரமாய் பாதுகாத்து வைத்திருக்கிறேன்
இன்றும் கூட உன் புன்னகையை
பார்த்தவர் யாவரையும் பிடிப்பதற்கு
என் காதல் பால்லாங்குழியாட்டம் அல்ல
உன்னை பிடிப்பதற்கு ஆயிரம் அர்த்தங்கள் இருப்பினும்
உன் மௌனமே முதற்காரணம்
சம்மதம் என்று ஒன்று நீ சொல்லாவிடினும்
உன் மௌனத்தில் அர்த்தம் புரிந்துகொண்டேன்
வாழும் காலம் வரை உன்னோடு தான் என் வாழ்க்கை
இன்றாவது உன் மௌனத்தை விலக்கி
எனக்கு வாழ்வை அளித்துவிடு

எழுதியவர் : டிலாயினி (21-Dec-16, 10:02 pm)
பார்வை : 189

மேலே