முத்தெடுக்கவா முத்தமிட்டு

மேனியெங்கும் தவழும்
உன் உதடுகளை
சிறைப் பிடிக்கவா
என் இரு உதடுகளால்....!
அன்பே சுவையாக உள்ளதே
அன்னையின் தேனீரை விட
உன் முத்தத்தில் தெறிக்கும்
எச்சில் துளிகள்..!
காலமெல்லாம் காத்திருப்பேன்
உன் காலடியில்....
நீ தரும் முத்தங்களுக்காய்..!
தினந்தோறும் தொல்லை கொடுத்து
வாட்டுகிறது என்னை
உன் சாயம் பூசிய சிவப்பு உதடுகள்..!
என்னைக் கடந்து போகிறாய் நீ
உன் அழகு கண்டு மயங்கிப்
போகிறேன் நான்
என்னை மறந்து..!
சத்தமிட்டே என் கவனத்தை
திசை மாற்றுகின்றன உன் காதணிகள்
நெருங்கி வந்தே உன் அருகில் நான்
முத்தெடுக்கவா முத்தமிட்டு..!
சி.பிருந்தா
மட்டக்களப்பு.