கண்களும் கதை பேசுமே

அழகை ஆடையாய் அணிந்து
அணிகலன்களுக்கே அழகு கொடுக்கும் என் காதல் பெண்ணே
புரியவில்லை எனக்கு
உன் கண்களின் அபிநயங்கள்...!

மனதினில் தவழும் வெண்மதியே
சிட்டாய் பறந்தே கண்களால்
கொள்ளை கொண்டாய் என் மனதை.!

காய்ந்து போன என் வாழ்வில்
பால்மழை பொழிந்து சென்றாய்
உன் முதல் பார்வையால்...!

என் தனிமை போக்க வந்த தேவதையே
கண்களால் காதல் மொழி நீ பேச
புரிந்து கொண்டேன் நான் உன்
கண்களும் கதை பேசுமென்று...!!!

சி.பிருந்தா
மட்டக்களப்பு

எழுதியவர் : சி.பிருந்தா (22-Dec-16, 2:00 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 86

மேலே