ஏற்றுக்கொள்ல்ளடா

நீ எனை ஏற்பாய் எனில்
நிதம் உயிர் வளர்க்க நேர்வேன்...

உன் தீர்ப்புக்காய் காத்துக்கிடக்கும்
அத்திக்கடவடா நான்...!!

எனை ஏற்றுக்கொள்(ல்)ளடா
வா....

என் இதழ் படிந்த வெடிப்புகளில்
உன் முத்தத்தால் நீர் பாய்ச்சிவிட வா...!!!

காகிதமில்லா தீவில் கூட
என் 'அவிழ் சிகையில்' தூதேற்றி
அனுப்புகிறேன்....

வந்து சேரடா என் மரணத்திற்கேனும்....

'நீதான் என் காதலி'
என்று சொல்லிவிட்டுச் செல்...

என் கல்லறையேனும்
உன் ஒற்றை சொல்லொடு
ஊடல் கொள்ளட்டும்....!!!

நீ சரி என்றால்
உன் சுவாசக் காற்றொடு
மஞ்சம் கொள்ள
என் மூச்சுக் காற்றை அனுப்பிவைக்கிறேன்....!!!

உன் ஒற்றை சொல்லிற்காய்
கற்றை கற்றையாய் கவி இயற்றுகிறேன்....!!

காற்றிலேனும் அவை உனை வந்தடைந்தனவா....??!

என் உயிரின் அணுக்களை
துணுக்குற்று வைக்கிறேன்
உனக்காய்...!!!

என் உயிர் சேர்க்கும் இழையாவாயா....???!!

என் இதழ் பசிக்கு இரையாவாயா...??!!

உன் ஒற்றை சொல்லிற்காய்
உகிர் கடித்து - என்
உயிர் வளர்க்கிறேன் ...!!

காதல் கோட்டை அடைய
காதல் அகழி தாண்ட வேண்டுமாம்.....

எனை அகழ்ந்தெடுத்து கூட்டிச்செல்லடா...!!!!

என் மொத்த உயிரையும்
உன் முத்தத்தீயில் கொளுத்திவிடு.....

என் மூச்சேனும் உனில்
மோட்சம் கொள்ளட்டும்...!!!!

##சிவனிறைச்செல்வி

எழுதியவர் : சிவனிறைச்செல்வி (25-Dec-16, 11:17 am)
சேர்த்தது : Sivaniraichelvi
பார்வை : 110

மேலே