தீ வைத்தக் கடல் --முஹம்மத் ஸர்பான்

பூலோகப் பந்து
அழகின் விந்தை
ஐவகை குறிஞ்சி
கடலின் பரப்பு

காற்று வீசும்
திசைகள் பார்
பாதை தேடும்
நிழலில் யார்

லட்சம் மக்கள்
கொன்ற அலை
இன்றும் கடல்
மீன்களின் வீடு

பாயும் நதிகள்
முகிலின் துகள்
ஜீவத் துருவம்
பாயும் சுனாமி

தொப்புள் கொடி
நீந்திச் செல்ல
சுமந்த கருவும்
ஆழம் மூழ்கும்

புவி மிரட்டும்
முத்துப் பாறை
நிலவும் சோக
கவிதை நீட்டும்

கண்ணீர் மல்க
உறவின் மடல்
மூங்கில் காடும்
மூர்ச்சையாகும்

காகிதம் போல்
சடலம் குவியும்
ஆவிகள் கண்டு
ஜனனம் அஞ்சும்

உடமை மறந்து
ஜீவன் காக்கும்
மனதின் மனிதம்
வென்ற நாளிது

கரை கடந்து
யுகத்தை ஆசை
தீர கற்பழித்த
கடலும் வன்மம்

மார்பின் நுரை
சேயின் மூச்சு
கல்லறையின்றி
குழியின் வீச்சு

தீ வைத்தக்
கடலும் வடு
குற்றம் இன்றி
உலகை நடு

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (26-Dec-16, 6:58 pm)
பார்வை : 161

மேலே