பூலோக தேவதை

வின்னில் மறைந்த வானவில்லை
உன் புருவத்தில் கண்டேன்...
உன்னில் கலைந்த கருங்குழலை
கார்மேகமாக வின்னில் கண்டேன்...

தேவன் கோயில் தீபங்கள்
உன் கண்ணில் கண்டேன்
ஸ்ரீதேவி தரிசனத்தை உன்
முகத்தில் கண்டேன்
கவிதை எழுத காகிதமாக
உன் இதழை கண்டேன்
என் கண்களை மூடி உன்னை
என்னுள் கண்டேன்...

உன் கொங்கை மேல் உள்ள ஆடையாக நான் மாற வேண்டும்
உன் மனதோடு நான் முப்போழுதும்
பேச வேண்டும்
உன் மடிசாய்ந்து உறவாட
தவம் செய்ய வேண்டும்
உன் இதயத்தில் குடிக்கொள்ள
நல் வரம் ஒன்று வேண்டும்...

பெண்மையின் மென்மை
உன் உடலெங்கும் கண்டேன்
உன் கன்னத்தை கண்டு அது
உண்மையென வியந்தேன்
உன் குரலை கேட்டு மயங்கிப்போனேன்
உன் நளினத்தை கண்டு
கிரங்கிப்போனேன்...

உனை பிரம்மன்
படைக்கவில்லை
பிரம்மனை
நீ படைத்தாய் போலும்
அப்படி ஒரு அழகும்
அங்க அமைப்பும்
உன் மேனி எங்கும்...

பூக்கள் மென்மையா அல்ல
உன் பாதம் மென்மையா
என்று பட்டிமன்றம் நடத்தினால்
அதில் உன் பாதம் தான்
மென்மை என்று தீர்ப்பும் வரும்..

உனை பூலோக தேவதை என்பேன்
வாழ்க உன் அழகும் மென்மையும்
பெண் குலத்திற்கே பெருமை நீ....

எழுதியவர் : செல்வமுத்து.M (29-Dec-16, 1:49 pm)
Tanglish : poologa thevathai
பார்வை : 241

மேலே