நகரவாசிகள்

யாருமற்ற தனிமையில்
ஊசலாடும் ஒற்றை ஊஞ்சல்...

பறிப்பதற்கோ., சூடுவதற்கோ பெண்களின்றி
தினமும் மலர்ந்து மடியும் மல்லி...

நீண்டு உயர்ந்த தாழ்வாரத்தை தாங்கும்
துறுபிடித்த இரும்புத் தூண்கள்...

பொழுதுபோக்கிற்காக விலைகொடுத்து
தனிமையை மட்டுமே வாங்கிவந்த தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள்...

விடிந்துவிட்ட என்றாவது ஒரு நாட்பொழுதில்
அவ்வப்போது வெளியூர் பயணங்கள்...

சிரித்துப் பேசினால்.,
'எங்கே இவர்கள் ஏதேனும் கேட்பார்களோ.." - என
சுற்றத்தாரிடம் பழக மறுக்கும் பக்கத்து வீட்டு பாரி வள்ளல்கள்...

இவர்கள்தான்.,
வல்லரசாக்கிக்கொண்டிருக்கும் இந்தியாவின்
திறமை வாய்ந்த நகரவாசிகள்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (30-Dec-16, 9:02 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 58

சிறந்த கவிதைகள்

மேலே