வாழ்வில் என்றென்றும் தேவை புன்னகை
ஜனவரி 10, உலக சிரிப்பு தினம்!
காதலிக்க கற்று கொள்ளுங்கள் அல்லது நீண்ட நாட்கள் நல்லபடியாக வாழ...ஒரு காலை உணவு
இரண்டு வேளை நடைமூன்று முறை சிரிப்புஅளவிட முடியாத அன்பு
- சீன பழமொழி
நாம் போகிற இடங்களிலெல்லாம், செய்கிற காரியங்களிலெல்லாம் வெற்றி பெற வேண்டுமெனில், சிரித்த முகமாக, மனதை லேசாக வைத்துக் கொள்ள, நாம் தயாராக இருக்க வேண்டும். எப்போதும் மாறாத புன்னகை, பொறுமை, சுறுசுறுப்பு மற்றும் நிதானம்; இது, வாழ்க்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர்கள் இப்படித் தான் இருப்பர்.
மனிதனுக்கு சிரிப்பு ஒரு மகத்தான தகுதிஅன்றாட வாழ்வு, தொல்லை மிகுந்ததாகி விட்டது.
ஒரு நிமிடம் சந்தோஷம் இல்லை. ஏதாவது சிந்திப்பதற்குள், கைப்பேசி ஒலிக்கிறது; 'டிவி'யில்
அதிர்ச்சியூட்டும் செய்து வருகிறது. இதில் எங்கே சிரிப்பது, மனதை லேசாக வைத்துக் கொள்வது? என்ற கேள்வி கணைகளை தொடுப்பதற்கு
முன், நாம் உலகில் உயிரோடு, மகிழ்ச்சியாக வாழ வேண்டாமா என்பதையும், ஒரு வினாடி யோசித்து பார்த்து விட்டு அடுத்த பத்திக்கு வாருங்கள்.
சிரிப்பு ஒரு மகத்தான தகுதி மனிதனுக்கு. வாழ்க்கையென்றால் ஏற்றங்களும், இறக்கங்களும்; இன்பமும், துன்பமும்; மகிழ்ச்சியும், வருத்தமும் இருக்கத்தான் செய்யும்.
உங்கள் பார்வையை மட்டும் கொஞ்சம் மாற்றிக்
கொள்ளுங்கள். அன்றாடம் நாம் செய்யும் வேலைகள், நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள் என, சின்ன சின்ன விஷயங்களை காதலிக்க ஆரம்பியுங்கள்; தானாகவே மனம் லேசாகி, முகத்தில் புன்னகை தாராளமாகவே உதிக்கும்.சில சமயங்களில் உங்கள் புன்னகைக்கு காரணம், உங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்; ஆனால், பல சமயங்களில் உங்கள் மகிழ்ச்சிக்கு காரணம், உங்கள் புன்னகையாக இருக்கலாம். காதலர் தினத்தை கொண்டாடுவதில் காட்டும் ஆர்வத்தை, சிரிப்பு தினத்தை கொண்டாடுவதில் நாம் காட்டுவதில்லை.
இன்று, (ஜன., 10) உலக சிரிப்பு தினம். கடந்த, 1998 முதல் இது கொண்டாடப்பட்டு வருகிறது. சிரிப்பின் வாயிலாக, உலகில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், 65 நாடுகளில், 6,000 சிரிப்பு மன்றங்கள்
நடத்தப்பட்டு வருகின்றன. மனிதன் சிரித்தால், மனித மனம் மாறும்; மனிதன் மாறினால், அவனைச் சுற்றியுள்ள உலகமும் மாறும் என்ற அடிப்படை தான் இதற்கு காரணம்.
இது சாத்தியமே என்பதை அறிவியல் உண்மைகள்
உறுதிபடுத்துகின்றன. மன இறுக்கம் குறைய, நட்பை வளர்க்க, நெருக்கமாக பழக, இடைவெளியை குறைக்க, மனம் தெளிவு பெற, மன மகிழ்ச்சி உண்டாக துணை
நிற்பது, நம் சிரிப்பு தான். சிரிக்கும் போது, மனதில் ஒருவித மகிழ்ச்சியான, கலகலப்பான உணர்ச்சி ஏற்படுகிறது. அப்போது, ஆரோக்கியமான வேதிப் பொருட்கள், நம் உடலில்
உற்பத்தியாவதால், நோய் தீர்க்கும் மருந்தாகிறது சிரிப்பு. புரட்சி செய்ய புன்னகை போதும் மேலை நாடுகளில், மருத்துவர்களே நோயாளிகளுக்கு நகைச்சுவை 'சிடி'யை தந்து, பார்க்கச் சொல்லுவர் மருத்துவமனையிலேயே. இதனால், நல்ல முன்னேற்றம் காணப்படும் என்பது அவர்களின் கண்டுபிடிப்பு. நோய் எதிர்ப்பு சக்தியை, உடலில் உற்பத்தி செய்யும் வெள்ளை அணுக்களை, சிரிப்பு முடுக்கி விடுகிறது.
* குழந்தைகள் ஒரு நாளைக்கு, 400 முறை சிரித்தால், நாம், 15 முறை தான் சிரிக்கிறோம்.
* மாரடைப்பை வர வைக்கும் மன அழுத்த
ஹார்மோன்களும், மூலக்கூறுகளும் பெருமளவு குறைந்து, உடல் ஆரோக்கியமடைகிறது.
நாயகியர் தங்களை மேலும் அழகாக்கிக் கொள்ள, என்ன என்னவோ செய்திட்டீங்க. இதையும் அப்படியே செய்து விட்டால் போச்சு... கண்ணுக்கு தெரியாமல் உள்ளுக்குள் ஒளிந்து இருக்கும் அழகை வெளிப்படுத்தும் ஒரு ஒப்பனை, புன்னகை. தினமும் சிரித்து, நம் கவலைகளை தள்ளி வைப்போம்.
மனம் முழுவதும், சுமைகளை தாங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், அதை, அப்படியே ஒரு ஓரமாய் கொஞ்ச நேரம் ஒதுக்கி வைத்து விட்டு, வாய் விட்டு சிரிக்கும்படியான
சூழ்நிலைக்குள் வாருங்கள். கவலைகள் காணாமல் போகாது; ஆனால், அதிலிருந்து எப்படி இலகுவாக வெளியில் வந்து தீர்வு காண்பது என்பதற்கான வழிமுறைகள், கண்டிப்பாய் கிடைக்கும். புரட்சி செய்ய வேண்டுமென்றால் புதுப்புது ஆயுதங்கள் தேவையில்லை. ஒரே ஒரு புன்னகை போதும்! என்ற கவிஞர் மு.கவிமதியின் கவிதை வரிகளில், புதைந்து கிடக்கிறது சிரிப்பின் மகத்துவம். பெரிய புரட்சி செய்வதற்கே இந்த சிரிப்பு போதும் என்ற போது, நம் கவலையை மறப்பது என்ன அவ்வளவு கடினமானதா என்ன?
-ஆர். வைத்தீஸ்வரி
உண்மையாக சிரிக்க முடியவில்லையே என்று கவலைப்பட வேண்டாம். சிரிப்பது போல நடியுங்கள்; அதாவது பொய்ச்சிரிப்பு. அது, உங்கள் தசைகளை இயங்க வைத்து, உதர விதானப் பகுதியை உசுப்பி விட்டு, உண்மையான சிரிப்பு தரக் கூடிய அத்தனை பலன்களையும், உங்களுக்கு அளிக்கும். ஏனென்றால், உங்கள் உடலின் பாகங்கள் மெய்ச்சிரிப்பு, பொய்ச்சிரிப்பு என்ற வித்தியாசத்தை அறிந்து கொள்ளும் ஆற்றல் அற்றவை; சிரிக்கும் போது ஏற்படும் தசைகளின் இயக்கமே, அவைகளுக்கு சிக்னல். காலப்போக்கில், உங்களுக்கு மெய்ச்சிரிப்பு உருவாகும் ஆற்றலும் விரைவில் வந்து விடும்.
குட் ஹார்ட், மருத்துவ விஞ்ஞானி