புத்தாண்டே வருக
சென்ற ஆண்டு சோகங்களை மாற்றுவோம் ஆயிரம் ரூபாய் நோட்டைப் போல.
சென்ற ஆண்டு துக்கத்தை மறப்போம் பழைய ஐநூறு போல.
இவ்வாண்டை வரவேற்போம் புதிய இரண்டாயிரம் கண்ட மகிழ்வு போல.
இன்னும் வசந்தம் வரும் என நம்புவோம் புது ஐநூறு காணும் நாளைப் போல.
சந்தோஷம் கண்ணுக்கு அருகில் தெரிந்தாலும் கிடைத்த ஆனந்தத்தில் மகிழ்வோம் வங்கி அனுமதித்து பெறும் பணத்தைப் போல.
இனிய பணத்தட்டுப் பாடற்ற,மகிழ்ச்சி குறைவு படாதப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.