மகத்துவம்

அன்பே சிவம்.
வாழ்வே தவம்..
இல்லையெனில் அதுவே கூவம்...
விஷம் நிறைந்ததே அரவம்...
அதை நீக்க செய்ய வேண்டுமே மாதவம்....
இல்லையெனில் விளையுமே பாவம்....
மனிதம் நிறைந்ததே பவம்....
இல்லையெனில் எங்கும் நிறைந்திருக்குமே சவம்...
அவசியமானதே ஆர்வம்...
அருவருக்கத்தக்கதே கர்வம்...
கர்வத்தால் உண்டாகுமே ஆணவம்...
ஆணவத்தால் மிகுமே அகம்பாவம்....
கர்வமும், ஆணவமும், அகம்பாவமும் நீக்கினால் வருமே மகத்துவம்.....