அவளுள் மழை ஒலி
அவளுள் மழை ஒலி
~~~~~°°°~~~~~°°°~~~~~
வாழ்வின் சித்திரம்
புன்னகை அல்ல
புரிதல் அல்ல
வினவும் விதையே...
உனது புன்னகை ஒலி
என்னை இழுக்கும்
விண்ணின் ஒலி...
என் தேடல்
உன் விழியின் மூடல்...
உன் விழியே
என் வாழ்வின் திறத்தல்...
கண்ணே
கலைந்து வி்டாதே
வாழ்கிறேன் கனவில்
உன் நினைவோடு...
கார்த்திகை கனவின்
ஒளியில் கலந்துள்ளேன்
உன் ஒளியாய் விளக்கேற்ற
காலம் முழுவதும் வா
காதலியே...
- லாவண்யா.