தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 10--முஹம்மத் ஸர்பான்
2017 ம் வருடத்தின் முதல் படைப்பு
91.தோற்றத்தின் அழகை பார்க்கும் உலகம்
உள்ளத்தின் சுத்தம் பேண தவறி விடுகிறது
92.கதவடைக்கும் கைகள் செவிடாகிறது
கதவை தட்டும் கைகள் குருடாகிறது
93.காளான்கள் தோட்டத்தில் தூவப்பட்ட
வித்துக்கள் காலாவதியானதால் சிலுவையாகிறது
94.கரசக் காட்டில் குவிந்த முட்களும்
ஈரமான பார்வையில் பூக்களாய் தெரிகிறது
95.பிச்சைப் பாத்திரத்தில் மனிதனின் உள்ளம்
சில்லறைகள் போல் எதிரொலிக்கிறது கனவுகள்
96.எழுதுகோல் மை தீர்ந்து போனதால்
அடிமை தேசத்தில் சுதந்திரம் ஜனனம்
97.நள்ளிரவில் மனிதன் வாழ்வை சிந்திப்பதால்
விழித்திருந்து காவல் காக்கிறது ஆந்தை
98.இன்று நடக்கும் கற்பழிப்பு பொய்யானது
நேற்று நடந்த கொலையும் மெய்யானது
நாளை எழுதப்படும் நீதிமன்றத் தீர்ப்பின்
கதை,திரைக்கதை,வசனம் என்பனவெல்லாம்
குற்றவாளியால் விலைக்கு வாங்கப்படுகிறது
99.ஒரு முறை தோன்றும் கானல் நீர்
பல முறை தோன்றுவதால் வாழ்க்கையும்
ஒரு முறை சிரித்து பல முறை அழுகிறது
100.யுக முடிவில் மலைகளும் பஞ்சாய் சிதறும்
பாவம் செய்தவன் நரகின் விறகாவான்