கற்கண்டு தமிழே
கற்கண்டு தமிழே சற்று தடைகண்டு நின்ற போதும்
பருகும் தேன் தமிழ்தானென்று
மீசையை முறுக்கிவிட்டு
நடை போடு நானிருக்கேனென்ற
பாரதி கண்ட நெஞ்சை
நோக்கிடு தமிழா நித்தம்
வீரமே வாழ்வுமென்று
தமிழனே தரணியதில்
வீரத்தின் விளைநிலமே
வீரமே விளைந்த மண்ணில்
சூரமே உன் உயிர் மூச்சேதான்
வடவரன் கோழைபோல
முதுகினிலே குத்திடினும்
நெஞ்சிக்கு நேராய் நின்று
நெஞ்சுக்கு நீதி என்று
முழங்கிடு தமிழா தமிழா