கூண்டுப்பறவை

பறக்கிறோம்
விமானத்தின்
ஐன்னலோர
இருக்கையில்
இறகுகள் இல்லாத ஒரு
கூண்டுப்பறவையாய்
அடைபட்ட நானும்...


வெளியே பரந்தவான்வெளியில்
சிறகுகளின் நீள்விரிப்பில்
சுதந்திரமாய்
காற்றுக்கடலில்
சுகமாய் நீந்துகிற
சில பறவைகளும்.


நிலாரவி.

எழுதியவர் : நிலாரவி (15-Jan-17, 6:18 pm)
பார்வை : 1192

மேலே