இருட்டில் ஒளிந்திருக்கும் விடியல் - புதுக்கவிதை

இருட்டில் ஒளிந்திருக்கும் விடியல்


கையளவு சாம்பல்
எந்தப் பறவை பறந்தாலும்
ஏற்கிறது வானம்,
எந்த சுரத்திலும் பிறக்கிறது
ஏழிசை கானம், ,
எந்த கைகள் யாசித்தாலும்
கொட்டுகிறது இயற்கை,



எந்த விழிகள் தொழுதாலும்
அன்பைத் தருகிறது மதங்கள்,
எந்த விரல் பட்டாலும்
பூக்கள் சிரிக்கின்றன,
எவர் நீர் ஊற்றினாலும்
உள்வாங்குகிறது வேர்,
எந்த கண்களுக்கும்
ஏழு நிறத்தை காட்டுகிறது
வானவில்,


எவர் கிழித்தாலும்
ஏழு நாட்களாய் உள்ளது
நாட்காட்டி,
எவர் நின்றாலும்
நிழல் அளிக்கிறது மரம்,
எவர் வீழ்ந்தாலும்
தாங்குகிறது பூமி,


பிறகென்ன --
இருட்டில் ஒளிந்திருக்கிறது விடியல் .
இன்றும் நேற்றும் நாளையும் ஒன்றுதான்
இந்தியா தேடுகிறது விடியலை ....
விடியலைத் தேடும் விட்டில் பூச்சிகள் நாம் .



பாரதத்தின் சுதந்திரம்
பார் ' தனில் கேலிக் கூத்தாகிறது .
இதில் ஒற்றுமை கீதம்
பாடும் கள்வர்களும் சூதாட்டக் காரர்களும்
அதுவே தேசியமாம் - இருட்டில்
ஒளிரும் மின்மினிப் பூச்சிகள் நாம் !!!


கவிஞர் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (17-Jan-17, 5:42 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 129

மேலே