தமிழன் இனம் மானம் கலாச்சாரம் காளைகளை
அவிழ வேண்டிய காளைகள்
காலை கட்டிப்போட்ட பெட்டைகள் (PETA )கள்
களத்தில் இறங்கிய இளைங்கர்கள்
அலை கரையில் ஆவேசம்
அளவு கடந்தும் அமைதி போராட்டம்
இணைய வலையில் இளைங்கர் படை
மனம் திறந்து பாராட்டிய இந்தியம் ......
கடும் கோபம் கொண்ட சீமாட்டி
ஏவலாள் செவி சாய்க்கா காரணம்
முதல் ஆள் இல்லா நேரம்
முடிக்கிவிடப்பட்ட காவல் தும்பிகள்
பேர் மட்டுமே காவல்
செய்வதெல்லாம் ஏவல்
கட்டவிழ்க்கப்பட்ட கலவரம்
உடைக்கப்பட்ட மண்டைகள்
காவல் கடந்து கலவரமானது
கடமைகள் தீ பிடித்தே வைத்தன
மூண்று சக்கரங்கள் முழு தீயாயின...
வீடுகள் தரையாயின
காளையை காப்பாற்ற வந்தவர்கள்
தலை தப்பவே இல்லை
மனிதம் காக்க ஆள் இல்லை
காக்க வந்த மீன் அவனும் விதியே வீதியிலே
அப்பா பணத்தில் அறப்போர் வந்தவன்
எங்கெங்கோ தெறித்து விட்டான்
அரணாய் வந்தவன் அம்போ
அழகாய் முடித்து வைக்க பட்டது
தமிழன் இனம் மானம் கலாச்சாரம் .....காளை....களை
---------------------------------------------------ராஜன் .பெ.வே |(ராஜன்.P V )