எச்சரிக்கை 2

எனது இக்கருத்தை தயவு செய்து புறக்கணிக்காமல் பகிருங்கள். இதில் நீங்கள் முரண்படுவீர்களெனில், தேசத்தின் தலையெழுத்து, மாநிலத்தின் தலையெழுத்து, உங்கள் சுற்றத்தாரின் நலன் எப்படியோ போகட்டும். எனக்கு ஆட்சேபணையில்லை.
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழகம் முழுமையும் ஆங்காங்கு போராடிய, போராடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கம் பல. நியாயமான, உணர்ச்சி மயமான இப்போராட்டக்களமானது தற்போதைய முதல்வர், பிரதமர் ஆகியோருக்கு மட்டும் எதிரானதாக மெல்ல மெல்ல திருப்பப்பட்டுள்ளது.
உணர்ச்சி வயப்பட்டிருக்கும் இந்நேரத்தில், சிந்தனை சற்று தடுமாறத்தான் செய்யும். ஆனால், தடுமாறாமல் இருக்கத் தவறாதீர்கள். ஏன் நான் இதைக் கூறுகிறேன் என என்ன தன்னிலை விளக்கம் கொடுத்தாலும், அதுவும் எனக்கெதிராகவே திருப்பக்கூடும் என்பதனை நன்கறிவேன். நான் ஒரு சமூக நல ஆர்வலனாகவே கருத்தை முன் வைக்கிறேன்.
ஆனால், மேற்கூறிய கூட்டத்திற்குள் தேசநலனுக்கும், மாநில நலனுக்கும் எதிரானவர்கள், மத தீவிரவாதத்தைப் பரப்புரை செய்வோரும், மதமாற்றத்தை தீவிரமாக செய்ய ஆர்வம் கொண்ட பிரிவும், சாதிய வன்மத்தை தூண்டுவோரும், பொதுமக்கள் ஆகிய அனைவருமே அறியாத வண்ணம் ஊடுருவியிருக்கின்றனர். இவர்கள் போராட்டக்களத்தில் இருப்போரை உசுப்பிவிட்டு, திட்டமிட்டு திமுக, அதிமுக இருவரையும் தள்ளிவைத்து, ஆனால், அதே வேளையில், முதல்வர் திரு.பன்னீர்செல்வம் அவர்களையும், பிரதமர். திரு.நரேந்திரமோடி அவர்களையும் மட்டுமே தனிப்பட்ட முறையில் குறிவைத்து விமர்சிக்கின்றனர். அது ஏன்?
அடுத்து இக்கூட்டத்தில் கலந்துகொண்ட விஷமிகள், பெரும்பாலான இளம்பெண்கள், இளைஞர்களிடம் அவரவர் மொபைல் எண்களை கேட்டுப்பெற்றுள்ளனர். இது எதற்கு என்பதை அறிவார்ந்த சமூகம் நன்குணரும்.
மற்றவர்கள், (அதுபோல மொபைல் நம்பர்களை தங்கள் அறியாமையால் தந்தவர்கள்) அதைப்பெற்றவர்களிடமிருந்து இனி அழைப்புகள் வரும்போது தயவு செய்து புறக்கணியுங்கள். இதே போலத்தான் ஈமெயில் முகவரி தந்தவர்களுக்கும். இதை நீங்கள் எச்சரிக்கையாகக் கொண்டு செயல்படுங்கள்.
இல்லையேல், உங்கள் வாழ்க்கை தடம்புரள வாய்ப்புள்ளது. நீங்களே கூட தேச, மாநில நலனுக்கு எதிரானவர்களாக திருப்பப்படுவீர்கள். குடும்ப உறவுகளை இழக்க நேரலாம். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
- M.பழனிவாசன்

எழுதியவர் : பழனிவாசன் (26-Jan-17, 4:25 pm)
சேர்த்தது : m. palanivasan
பார்வை : 87

சிறந்த கட்டுரைகள்

மேலே