எது சமையல்

அறுசுவையும் அளவாய் அமைவது
உன்னத சமையல் தானே
அணைவரும் அழைந்து திரிவதும்
இந்த அரைஜான் வயிற்றுக்குத்தானே

மசாலவுடன் மாமிசம் சேர்ந்தால் பிரியாணி
மரைக்காயர் வீட்டில் பிரியமாய் கிடைப்பதும் அதுவேநீ
தெருவுக்கு தெரு தலைப்பாகட்டி-யாய் இருப்பதும்நீ
மனசோடு மனசு சேர்ந்தால் மகிழ்ச்சிதான் இனி

உணவில் பூண்டு சேர்த்து வந்தால்
இதயம் வலுவாகும்
உண்டபின் சிறிது நடந்து சென்றால்
வயது நெடிதாகும்

அம்மா சமைப்பது அன்புச்சமையல்
அக்கா சமைப்பது வம்புச்சமையல்
மனைவி சமைப்பது மந்திரச்சமையல்
வெங்கடேஷ் பட் சமைப்பதோ
சமையலோ சமையல்

உற்றவரும் மற்றவரும் ஒன்றாய் இனைந்து
விரும்பி உண்பது விருந்தன்றோ
புதுபெண் செய்வது சமைத்து பார்
பொண்டாட்டி சமைப்பதையோ ருசித்துப்பார்

ஆசிரியர் சமைப்பது அறிவாகும்
மாணவர் சமைப்பது மார்காகும்
உழவன் சமைப்பது உணவாகும்
அதை உண்டு கழிப்போர் பலராகும்

இறைவன் சமைத்தது இயற்கையெனில்
நம் இன்பத்தில் சமைந்தது
நம் பிள்ளைகள் அன்றோ

ஊண் கொடுத்து உதிரம் கொடுத்து
அம்மா சமைத்த அன்பு உடலை
டாஸ்மார்க் அமிலம் குடித்து
அழித்துக் கொண்டு விழிக்க மறுப்பது ஏனடா

பெரியார் சமைத்தது பகுத்தறிவு
காமராசர் சமைத்தது கல்வியறிவு
அண்ணா சமைத்தது தமிழறிவு
அரசியலில் இன்று காணாமல்
போனதே பொதுநல அறிவு

உடல் சமைந்தால் உறுதியாகும்
உள்ளம் சமைந்தால் அமைதியாகும்
மேகம் சமைந்தால் மழையாகும்

வண்ணம் சமைந்தால் ஓவியமாகும்
எண்ணம் சமைந்தால் எழுத்தாகும்
எம் இளைஞர்கள் எழுந்தால்
எல்லாம் சரியாகும்

எதுகையும் மோனையும் சீரோடு
சமைந்தால் யாப்பு ஆகுமே
எல்லோர் மனதிலும் அன்பு
சேர்ந்தால் உலகம் இனிக்குமே

எழுதியவர் : (31-Jan-17, 7:46 pm)
சேர்த்தது : கலியபெருமாள்
Tanglish : ethu samayal
பார்வை : 128

மேலே