முயற்சியுடையார்

வீழ்ந்தது நீயாக
எனில்
தூக்கிவிடுவார்கள்
என்று
ஏன் எதிர்பார்க்க
வேண்டும்?
உதவுதல் போல்
நடித்து
பலன் அடைய
நினைக்கும்
சுய நலக்கூட்டமே
உன்னை சுற்றி,
கையூன்றி எழ
முயற்சி செய்,
நிச்சயம்
மேலெழுவாய்!
அப்பொழுதுதான்
மீண்டும் விழுவது
என்பது,
கேள்விக் குறியாகும்!
அடுத்தவர் கையை
எதிர்பார்த்தால்?
உன் கையே
உனக்கு
உதவாமல் போகும்..,
#sof_sekar