விடியலின் எழுச்சி

ஆதிக்க
வர்க்கத்தின்
"ஆட்சி"...
அடக்கி
ஒடுக்கப்பட்டிருந்தது
அடித்தட்டு
மக்களின்
"மூச்சு"...
இந்நிலையில்
தன்
பெற்றோர்க்கு
14 வது
மழலையாகப்
பிறந்தது
ஓர்
"விடியலின் எழுச்சி"
திரும்பும்
திசையெங்கும்
"தீண்டாமைக்
கொடுமை"...
கோணிப்பைக்
குந்தலில் வாடியது
"பள்ளிப்பருவ
இளமை"....
இன்னல்களின்
மத்தியில்
"கல்லூரிப்படிப்பு"...
அங்கேயும்
விடவில்லை
"உயர்சாதியின்துடிப்பு".
புழுதியில்பூத்த
புன்னகைஇவன்
என
சிலர் தன் மனதை
"புண்ணாக்க"...
இருப்பினும்
அதை செவிகேளாமல்
தான்கொண்ட
இலட்சியத்தில்
"ஆர்வஞ்செழிக்க"
நானிருக்கிறேனென
பரோடாமன்னர்
"ஆதரவளிக்க"
மேலைநாடுகள்
சென்று
பொருளாதாரம்
அரசியல்
தத்துவமென
பட்டம் கற்றார்
" தீண்டாமை
ஒழிக்க"....
கற்றக்கல்வி
பெற்ற பட்டம்
இவையாவும்
தன்னோடு "வைத்துக்கொள்ளாமல்"
சமூக அவலநிலையை
வேரோடழிக்க ஓய்வின்றி உழைத்தார்
"சற்றும் நில்லாமல்"...
தடைகள் பல கடந்து
தன்
தலைமையில் இந்திய அரசியலமைப்புச்
சட்டம்
"இயக்க"...
இதைகண்டு மேலைநாட்டவரும்
"வியக்க"...
அத்தனையும் வழிவகை செய்தது
எல்லோர்க்கும்
எல்லாம்
"கிடைக்க"...
நாட்டின்
ஏற்றத்தாழ்வுகள்
களைய இவர்
எழுதியது பல
"நூல்கள்"...
சமூகத்தில்
சமரசம் நல்கிட
இவைதான்
இன்றளவும்
"மேற்கோள்கள்"......
தன் இறுதி
மூச்சுவரை தேசத்திற்காகவும்
தீண்டாமைக்
கெதிராகவும்
நடமாடியது
அண்ணலின்
"கால்கள்".....
என்றும்
சமத்துவ
மனிதராய்
நடப்போம்
"அண்ணலின்
வழிகள்"
நேற்றல்ல
இன்றல்ல
என்றும்
நம்முடனே
வாழ்கிறார்
உனக்கும்
எனக்குமான இருட்டைத்துடைக்கும் "எழுஞாயிறு".....
விலங்குத்தோல்
போற்றிய
மனித
இனமே!
பார்வையைப்
பறிக்கும்
மின்னலாக
வாழாதே
பார்வையைக்
கொடுக்கும்
அண்ணலாக
வாழ்ந்திடு...
விடியலின்
எழுச்சி
"அண்ணல்"
-டாக்டர்.BR.அம்பேத்கர்-