விழிப்புணர்வு கவிதைகள்

சமூக தளங்கள் ........
சமூகத்தை சீர் படுத்தும் ......
தளங்களாக இருக்கவேண்டும் .....
சீரழிக்கும் தளங்களாக.......
மாறிவிடக் கூடாது ......!!!

இராணுவ புரட்சி மூலம்.....
ஆட்சியை மாற்ற இருந்தவர்களை.....
சமூகதள தகவல் மூலம் மக்கள்.....
புரட்சி வெடித்து இராணுவ புரட்சி.....
தோற்கடிக்கப்பட்டற்கு சமூக தள.....
செய்தி பரிமாற்றம் உதவியதை.....
யாரும் மறந்திடமாட்டார்கள்.........!!!

தலைவன் இல்லாமல் தம் இன.....
பண்பாட்டை இளைஞர் போராட்டமாய்.....
போராடி வெற்றி கண்ட ஜல்லிக்கட்டு......
போராட்டம் சமூக தள பரிமாற்றம்.....
உலகையே திரும்பி பார்க்கவைத்து......
உலக புரட்சியின் புதிய பரிமாற்றத்தை.....
படைத்தது சமூக தள ஆயுதம்........!!!

மறுபுறத்தில் வேதனையான .......
சகிக்க முடியாத தகவல் பரிமாற்றம்.........
நடைபெற்றுகொண்டிருப்பதும் ........
மறுப்பதற்கில்லை.........
தனிப்பட்ட பகைமைக்கும்.........
விருப்பு வெறுப்புக்கும் சமூகதளம்......
பயன்படுவது வேதனை அளிக்கிறது.........!!!

எங்கோ நடைபெற்ற நிகழ்வை.......
திரித்து கூறுதல் பொருத்தமற்ற......
ஊகங்களை மக்கள் மத்தியில்......
பரப்புதல் ஒருவகை சமூக குற்றமே......
உண்மையை பலமுறை சொல்லுங்கள்.....
அது சமூகத்தின் தேவைப்படுகள்.....
பொய்யை பலமுறை கூறி உண்மை.....
ஆக்காதீர்கள் அது சமூக விரோதம்.....!!!

இன்னும் பல சமூக அவலமுண்டு.......
அதற்கும் போராட்ட தேவையுண்டு......
தப்பான தகவல்களை பரப்பினால்......
உங்கள் உண்மையான தேவைக்கு......
சமூகம் முன் வர தயங்கும்..........
எந்த ஒரு ஆயுதத்தையும் உண்மைக்காக.......
பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றியுண்டு....
சிலவேளை தோற்றலும் வரலாறு ஆகும்......!!!

நம் கையில் ஆயுதம் இருக்கிறது......
என்பதற்காக எப்படியும் பயன்படுத்தலாம்.......
எப்போதும் பயன்படுத்தலாம் என்ற......
எண்ணம் மாறவேண்டும் உண்மைக்கு......
பயன்படுத்துவோம் தொடர் வெற்றியை.....
பெறுவோம்...............................!!!

&
சமூக விழிப்புணர்வு கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (4-Feb-17, 9:15 pm)
பார்வை : 265

மேலே