அக்கரைச் சீமையில்

அக்கரைச் சீமையில
நானிங்கு உண்ணலடி
உனக்கங்க ஊட்டிவிட
உள்ளதெல்லாம் அனுப்பினேன்டி

ஊணுறக்கமில்லயடி
உளண்று நானும் திரியிறேன்டி
உற்றார் சொப்பனத்திற்கு
ஒத்தயில கழியிறேன்டி

நாலு செவத்துக்குள்ள
நாசமாப் போகுதெடி
நீயுமங்க தனிச்சிருந்து
நிம்மதிய தேடுறியா....

மனிசனயிங்கு காணலடி
மாமிச உண்ணிகளெடி
மாடாய்த்தான் மேய்கிறான்டி
மதிகெட்ட ஜென்மங்களெடி

மானத்தயும் வித்துட்டண்டி
மனன் நெந்து அழுகிறன்டி
உயிராச்சும் மிஞ்சிஞ்சென்டா
உனக்காக வந்திடுவென்.

காசிக்கி கப்பலேறி வந்திட்டன்
காசாச்சுமிருக்கா நமக்கிட்ட
வயசிதான் கடந்திடுச்சி
வாலிபமும் தீந்திடுச்சி

இக்கரையில வந்ததால
எம்கரையில விட்டதெல்லாம்
வீணாகிப் போயிட்டுது
தலயெழுத்தாக்கு மென்டு
தலயில அடிச்சிக்கிறன்டி

படச்சவன தொழுகிறன்டி
பவமெம்மள கரைசேக்க
பத்திரமா இருடி புள்ள
பறந்து நானும் வந்திருவன்

எழுதியவர் : நேசமுடன் ஹாசிம் (4-Feb-17, 1:59 pm)
சேர்த்தது : ஹாசிம்
பார்வை : 45

மேலே