அறவழி எரிநட்சத்திரங்கள்!!! இளங்காளை வீரத் தமிழன்டா!!!

கல்தோன்றி  மண்தோன்றா காலத்தே, முன்தோன்றி மூத்த குடி தமிழ்குடியே!!!

என் எழுதுகோள் பெருமையடைகிறது! தமிழனின் மனதையும், மண் மணத்தையும் உணர்த்த உதவியதற்கு!

எம்முன்னோர்களும், கோமான்களும் சங்கம் வைத்து, 
எம் தேனினும் இனிய தமிழ் மொழியை வளர்த்தனர்!!!

வீரத் தமிழ் மொழியோடு, எம் மண்ணின் மைந்தர்களுக்கு, வீரத்தை உணவோடும் கலந்து 
எங்கள் வீரத்தாய் உணவை ஊட்டியிருக்கிறாள்.    

கற்பதிலும், களத்திலும் கண்ணியமான வீரத்தையே புகட்டியுள்ளனர்!!! 

எங்கள் தமிழ் மனமும், மண்ணும் என்றும்,
ஏன்! போர்க்களத்தில்கூட  கண்ணியமான வீரத்தையே சரித்திரங்களாக விட்டு சென்றுள்ளது!!!

எம் வீரத்தாய் புகட்டிய பாலிலே கடுகளவும் மாசற்ற வீரத்தையே புகட்டியிருக்கிறாள்!!!

எம் தமிழனின் மறுத்தாயாக! அவனது இறுதி மூச்சு வரை! "கோமாதாவை" தன் வீட்டுத்தாயாக, இறையாகவும் வழிபடுகிறான்!!!

தன் இல்லத்திலும், உள்ளத்திலும் வாழ்கின்ற தெய்வங்களாக பூஜிக்கப்படுபவை தான்,
எங்கள் கோமாதாவும், காளைகளும்!!!!

மாற்று கருத்துக் கொண்டு மாற்றான் வந்தால், 
தமிழும், தமிழனும் வீழுந்து விடுவானோ!!!        

எம் 'கோ'வையும் 'கோமாதா'வையும் வேர் அறுத்துவிடலாம் என்று நினைத்தாயோ!!!

தமிழ் என்பது மொழி, இனம் என்பதை மீறி தன் மரபை பின்னுக்கு தள்ளாமல், முன்னோடிகளாக எடுத்துக்கு கொண்டு வெற்றி நடை போடும் தமிழன்டா!!!

எம் மரபை பிழையென்று கூறி,
தமிழை! தமிழனை! சர்ச்சைக்குரிய திடலில் தள்ளி,
திண்டாட விட எண்ணிய "நரி கூட்டமே!!!"

இதோ!

என் தமிழன் உணர்ச்சி வசப்பட்டு உன் நூதன வலையில் வீழ்வான் என்று நினைத்தாயோ!!!    

எம் தமிழ் தாய் வீரத்தோடு விவேகத்தையும் பாலிலே ஊட்டியிருக்கிறாள்!!!

வீர தமிழன் வளர்ந்து வரும் பருவத்திலேயே எங்கள் 'கோமாதாவும்' தனது பாலிலே வீரத்தை எங்கள் இரத்தத்திலேயே விதைத்துயிருக்கிறாள்!!!

எங்கள் தமிழனின், வீரமும் விவேகமும் சோதிக்கப்பட்டால், காயப்பட்டு நிற்கப்போவது நீ! தமிழன்று!!! தமிழனன்று!!!

உடை , நடனம் கல்வியில் மாற்றம் கானவே, 
எம் தமிழனும், தமிழச்சியும் சற்றே மாற்றம் கொண்டனர்!!!  

உனது கனவு மன(ண்)கோட்டை போல, தமிழன் தன்மானமற்று மண் மணமும், தமிழ் குணமும் இன்றி மௌனத்திலேயே மறைந்து கொள்வான் என்று நினைத்தாயோ!!!

வீரத்தமிழனின் மௌனம், சீறி வெடிக்குமேயொழிய!!!!
உனது கனவு போல் இருளிலேயே வீழ்ந்து மடிந்து போய்விடுவான் என்று மனப்பால் குடித்தாயோ!!!

எம் தமிழனோ! இந்த மண்ணிலே வளர்க்கப்படுவதில்லை!
எம் முன்னோர்களால்  விதைக்கைப்பட்டவர்கள் என்று அறிவாயோ!!!

எம் முன்னோர்கள் நம்பிக்கை துரோகங்களால் வீழ்த்தப்பட்டிருக்கலாம்!!!

ஆனால்,

எம் முன்னோர்கள் இம்மண்ணிலே விதைகளாக விதைத்து எங்கும் தூவப்பட்டிருக்கிறார்கள்.

இப்பொழுது அவ்விதைகளின் ஆரம்ப கொடிகளே, இந்த அறவழி எரிநட்சத்திரங்கள்!!!

இவை நாளை மரங்களாகி, கிளை விடும்பொழுது, அதன் மரபும், மணமும் இன்னும் வலுப்பெறும்!!!

ஒரு நாளும் வீழ்ந்து போகாது!!!

தமிழும், தமிழனும் எங்கும் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பான்! 
வீழ்ந்து போவான் என்று நினைத்தாயோ!!!     

எம் காளையர்கள், இளங்காளைகளை  "தழுவுதலை" "வதை" என்று கூறி தமிழரின் மரபுக்கு சவாலாக நீ நிற்கலாம்!!!

ஆனால்,

காளைகளும், காளையரும் இரட்டை பிறவிகள்!

காளையரின்றி காளைகளும் வாழாது!!!
காளைகளின்றி காளையர்களும் வாழான்!!!

காளைகள் எம் தமிழ் வீரத்தின் அடையாளம்!

காளைகளை அடக்குமுறை செய்வது எம் காளையர்களின் வீரத்தின் அடையாளத்தை புதைப்பதற்கு நிகராகும்!!!

வீரமின்றி தமிழும், தமிழனும் வாழான்!!!

எம் கோமாதா ஊட்டிய பாலிலே காளைகளின் வீரத்தையும் எம் காளையர்கள் இரத்தத்திலேயே விதைக்கப்பட்டுவிட்டது.

விதையை கருவறுக்க நினைத்தால் எரிநட்சத்திர பட்டாளமாய், எம் காளையர்கள் நீ இருக்கும் இடம் தெரியாமல் பஸ்பமாக்கிவிடுவார்கள் !!!    

இனி எங்கும் தமிழ் மனமும், தமிழனின் குணமும் மணம் வீசும்!!!

மணம் வீச வாய்ப்பு தந்த பகைவனையும் தலை வணங்குவான் தமிழன்!!! தமிழன்டா!!!

எம் காளையர்களை வீழ்த்த நினைத்தாலும், 

விதைகளைத்தான் எம் தமிழ்மண்ணிலே விதைப்படுவார்கள்!
புதைக்கப்படமாட்டார்கள்!!!

நீ புதைக்க நினைத்தாலும், படரும் கொடியாக, தமிழ் மண்ணிலேயே முளைத்து கொண்டே இருப்பான் தமிழன்! தமிழன்டா!!!

ஆற்பரிக்கும் கடலில், அலைகளே அடங்கி போகும், 
எம் காளையர்களின் வீரத்தின் முன்பு!!!

வீரமரணம் அடைவான் தமிழன்! ஆனால் எங்கும், என்றும், எப்பொழுதும் வீழிந்து போகமாட்டான் தமிழன்!

நீ வெறும் ஒரு சிறுத்த தீ பொறி, எங்கள் எரிநட்சத்திரங்கள் முன்பு சிறுத்து போவாய்!!!

எங்கள் இளங்காளைகள் என்றும் எங்கும் மார்தட்டி சொல்வான்!

நான் தமிழன் என்று! இளங்காளை தமிழன்டா!!!!

எழுதியவர் : எண்ணத்திரவங்கள் (5-Feb-17, 12:29 pm)
சேர்த்தது : எண்ணத்திரவங்கள்
பார்வை : 78

மேலே