வானோங்கி வாழ்வான் வீரத்தமிழன்!!!
மாடு மேய்ப்பவன் தானே,
ஏய்த்து விடலாம் என்று எண்ணினாயோ!!!
காட்டிலும்! மேட்டிலும்,
முள்ளிலும்! மழையிலும்,
களைத்துப் போகாமல் களை எடுத்து அன்னம் படைப்பான் விவசாயி!
ஆனால் நீயோ,
அன்னம் இட்ட கைகளுக்கு விலங்கு பூட்டி அழகு பார்த்து விடலாம் என்று கனவு கண்டாயோ!!!!
உன் தலைமுறையை உருவாக்க,
தலையணை இல்லாமல் தன்னை உருக்கி,
பொன் நெல்மணியை தரும் உயர்ந்த உழவனை,
கருவறுக்க நினைக்கலாமோ!!!!!
நீ கொண்ட எண்ணம் வெல்ல வேண்டும் என்பதற்கு,
மாசற்ற மரபை மனிதம் இல்லை என்று பழி சூட்டலாமோ!!!!!
மண்ணை நம்பி வாழ்பவன் தானே, புதைத்து விடலாம் என்று துணிந்தாயோ!!!!!
விதைப்பவன் என்றும், புதைந்து போவது இல்லை!!!!! முளைத்து கொண்டே தான் போவான்!!!!!!
முளைத்தது சிங்கம் அல்லடா!! சிங்க கூட்டங்களாடா!!!!
சிங்கங்களை அடக்க சொல்லுங்கள் என்று சொல்லும் மூடர்களே,
எங்கள் தமிழ் இளசிங்கங்கள் தான் முரட்டு காளைகளை கைபற்றி உள்ளது!!!!
சிங்கம் என்னடா!!! யானை படைகளை அனுப்புங்கள், எங்கள் சிட்டு குருவிகளும், மான்களும் போதுமே அவைகளை வீழ்த்த!!!!
தமிழன் என்றும் வாழ்வான்!!! எங்கும் வாழ்வான்!!!!!
வாழவும் வைப்பான்!!! வீரத்தமிழன்டா!!!