உள்ளத்தில் வலியைகூட்டி

உள்ளத்தில் வலியைகூட்டி உணர்த்திவிடும் உன் விழிகள்
நெஞ்சுக்குள் தீயை மூட்டி வேதனையில் வாட்டுதடி
இறங்காத இதயத்தையும் இறங்கவைக்கும் உன் விழிகள்
கலங்காத மனதையுமே
கரையவைச்சு பார்க்குதடி
வான் தூவும் நீரினிலும்
கலங்கலான நீரிருக்க
நான் தூவும் கண்ணீரிலும்
உன் நினைவு உப்பாக சுவைக்குதடி
மழைதுளீயோ உயிர் துளிதான்
என் கண்ணீரோ
உன் உயிர் துளிதான்